Saturday, September 05, 2015
தேசிய அரசாங்கத்தின் கீழ் ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் அடுத்த
வாரம் புதன் அல்லது வியாழக்கிழமை பதவிப் பிரமாணத்தை மேற்கொள்வார்கள் என்று
தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
அன்றைய தினமே எஞ்சியுள்ள நான்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்துக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
நேற்றையதினம் 42 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டனர்.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் 11 பேருக்கு அமைச்சுப் பதவிகள் கிடைத்தன.
ஏற்கனவே வெளிவிவகார அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டிருந்த நிலையில் மொத்தமாக 43 பேர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர்.
தேசிய அரசாங்கத்தின் கீழ் 48 அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் பதவி ஏற்பர்.
ஜனாதிபதியும் அமைச்சுப் பதவி ஒன்று ஏற்றுள்ள நிலையில், இன்னும் 4 அமைச்சுப் பதவிகளுக்கான அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளனர்.
No comments:
Post a Comment