Thursday, September 10, 2015
தமிழக மீனவர்களை விடுவிக்க இருப்பதாகவும், ஆனால் படகுகளையும், வலைகளையும் விடுவிக்கப் போவதில்லை என்றும் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மஹிந்த அமரவீர செய்தியாளர்களிடம் இதனை கூறியுள்ளார்.
இலங்கை கடல்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் 16 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்படுவர் என்றும், ஆனால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும், வலைகளையும் விடுவிக்கமாட்டோம் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment