Tuesday, September 1, 2015

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி: சுமந்திரன்!

Tuesday, September 01, 2015
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது எனவும் அவ்வாறு நிலைப்பாட்டை மாற்றுவதற்கான சூழ்நிலைகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்தில் இணைந்துகொள்ளும் நிலையில் அது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இணைந்துகொள்வதாகவே கருதப்படும் எனவும் இதன்படி எதிர்க்கட்சியில் அதிக ஆசனங்களை கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமெனவும் கோரி அந்தக் கட்சியினால் சனிக்கிழமை அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது.

இதன்படி, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டதை போன்று  தொடர்ந்தும் தாம் ஒரே நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும் தமது நிலைப்பாட்டை மாற்றுவதற்கான சூழ்நிலை உருவாகவில்லையெனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment