Tuesday, September 01, 2015
பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைய
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி
தலைவர் பதவி கிடைக்குமாயின் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என
பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல்
வீரவன்ச தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்
சில உறுப்பினர்கள் கைகோர்த்து ஆட்சிய மைப்பதால் எம்மையும் ஆளும்
கட்சியென கருதிவிட முடியாது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம்
ஆளும் கட்சியின் கூட்டணியில் கைகோர்க்க மாட்டோம் எனவும் அவர்
குறிப்பிட்டார்.
தேசிய சுதந்திர முன்னணியால் நேற்று கொழும்பில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து
வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இப்போது உருவாகியிருக்கும் பாராளுமன்றமானது ஒரு
வரையறைக்குள் உட்பட்டதல்ல. இந்த அரசாங்கத்தில் யார் ஆளும்கட்சி.
யார் எதிர்க்கட்சி என்ற அடையாளம் இல்லாதுள்ளது. அதேபோல் இவர்கள்
கூறுவதைப்போல் இந்த அரசாங்கத்தை தேசிய அரசாங்கமாக வர்ணிக்கவும்
முடியாது. ஏனெனில் இந்த அரசாங்கத்திற்கு அனைத்துக் கட்சிகளின்
ஆதரவும் கிடைக்கவில்லை. தேசிய அரசாங்கம் அமையும் பட்சத்தில்
அரசாங்கத்தின் தேவைக்கு அமைய அமைச்சரவையின் எண்ணிகையை அதிகரிக்க
முடியும்.
இந்த நியதியை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் இந்த விதிமுறை இப்போது அமைந்திருக்கும் அரசாங்கத்துக்கு பொருந்தாது. ஆனால் புதிய அரசில் அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அகவே இது முழுமையாக ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடாகும். அதையும் மீறி அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நிலைப்பாட்டில் இந்த அரசாங்கம் செயற்படுமாயின் அதற்கான முழுமையான எதிர்ப்பினை நம் வெளிப்படுத்துவோம்.
எதிர்வரும் முதலாம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது. இதில் சபாநாயகர் யார் என்பதை தீர்மானிக்கப்படும். அதேபோல் பாராளுமன்ற அமர்வின் பின்னர் கட்சி தலைவர்கள் கூட்டம் கூடவுள்ளது. இந்த கூட்டத்தில் எமது நிலைப்பாட்டை நாம் முன்வைப்போம். அமைச்சரவை அதிகரிப்பை கட்டுப்படுத்தக் கோரி நாம் சபாநாயகரிடமும் தெரிவிப்போம். பாராளுமன்ற விதிமுறைகளை மீறி இந்த அரசாங்கம் செயற்பட முடியாது.
மேலும் பாராளுமன்றத்தில் யார் எதிர்க்கட்சியாக செயற்படுவது என்ற சிக்கல் நிலைமை எழுந்துள்ளது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிலர் கைகோர்த்து ஆட்சியமைப்பதால் எம்மையும் ஆளும் கட்சியென குறிப்பிடுகின்றனர். ஆனால் நாம் ஆளும் கட்சி அல்ல. எம்மை அவ்வாறு தெரிவிக்க முடியாது. நாம் எப்போதும் இந்த குழப்பகர ஆட்சியில் கைகோர்க்க மாட்டோம். ஆகவே நாம் எதிர்க்கட்சியாகவே செயற்படுவோம். அதேபோல் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக யார் செயற்படுவது என்ற சிக்கலுக்கு சபாநாயகரே தீர்வு காண வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்
எதிர்க்கட்சியாக செயற்படுவது பாராளுமன்ற விதிமுறைகளுக்கு
அமைவாகவெனின் நாம் அதற்கு முரண்படமட்டோம். அதேபோல் எதிர்வரும் முதலாம்
திகதி அல்லது இந்த வாரம் பாராளுமன்ற கூடத்தின் போது இந்தக் கேள்விகளுக்கு
விடை கிடைக்கும். அரசாங்கத்தில் யார் யார் அங்கம் வகிக்கின்றனர் என்றதைப்
பொறுத்து பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி யார் என்பதை தீர்மானிக்க முடியும்
என்றார்.
No comments:
Post a Comment