Tuesday, September 29, 2015
இலங்கையின் நீதித்துறை மறுசீரமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு அமெரிக்கா 363 கோடி ரூபா நிதியுதவி அளித்துள்ளது.
இன்று காலை வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் நடந்த
வைபவமொன்றில் இந்த நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதுடன், நீதித்துறை மேம்பாடு
மற்றும் நீதித்துறை சுயாதிபத்தியத்தை பாதுகாத்தல் தொடர்பான விடயங்களில்
இணைந்து செயற்படுவதற்கான ஒப்பந்தமொன்றில் அமெரிக்காவும் இலங்கையும்
கைச்சாத்திட்டுள்ளன.
வெளிவிவகாரத்துறை பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும்
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில்
கைச்சாத்திட்டுள்ளனர்.
சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றில்
தொழில்நுட்ப மேம்பாடுகளை மேற்கொள்ள இந்த நிதியுதவி பயன்படுத்தப்படும் என்று
வைபவத்தின் பின்னர் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஊடகவியலாளர்களிடம்
கருத்து வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment