Monday, August 3, 2015

எட்டாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புகள் நல்ல முறையில் இடம்பெற்று வருகின்றன!

Monday, August 03, 2015
எட்டாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றன.

காவல்துறை அதிகாரிகள், வலய மற்றும் கோட்டகல்வி காரியாலய பிரிவு, தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளின் ஆசிரியர்கள் உள்ளிட்ட துறையினருக்கான அஞ்சல் மூல வாக்களிப்புகளே இன்றைய தினம் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில், வாக்களிப்பு பணிகள் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதான கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், எதிர்வரும் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் ஏனைய அரச துறையினருக்கான அஞ்சல் மூல வாக்கெடுப்புகள் இடம்பெறவுள்ளன.

தேர்தல் திணைக்களத்தினதும், மாவட்ட செயலாளர் காரியாலயங்களிலும் உள்ள அதிகாரிகளுக்குமான அஞ்சல் மூல வாக்களிப்புக்காக எதிர்வரும் 8ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தமுறை அஞ்சல் மூல வாக்களிப்புக்காக 5 லட்சத்து 67 ஆயிரத்து 291 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான உத்தியோகபூர்வ வாக்காளர்கள் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னதாக அவற்றை விநியோகம் செய்யும் நடவடிக்கைகளை நிறைவு செய்யப்படும் என அஞ்சல் மா அதிபர் தெரிவித்தார்.

10ஆம் திகதிக்கு பின்னரும் உரிய முறையில் வாக்காளர் அட்டைகள் கிடைக்காத பட்சத்தில் அருகில் உள்ள அஞ்சலகங்களில் அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.            

No comments:

Post a Comment