Tuesday, August 4, 2015

இலங்கை ஒரு ஐக்கிய நாடாக முன்னோக்கி நகர வேண்டும்: நாட்டை பிரித்து வேறுபடுத்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை: மஹிந்த ராஜபக்ஷ!

Tuesday, August 04, 2015
நாட்டை விரும்பாத டொலர்களுக்கு வேலை செய்யும் சிவில் அமைப்புகளுக்கு மத்தியில் உண்மையில் நாட்டை நேசிக்கும் தேசிய அமைப்பு இருப்பது மகிழ்ச்சி என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிக்குகள் குரல் மற்றும் தேசிய ஒற்றுமை என்ற அமைப்புக்கள் இணைந்து கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
 
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார். அபிவிருத்தியின் போது பாரபட்சம் காட்டவில்லை என்றும் அனைத்து இனங்களுக்கும் பொறுப்பை நிறைவேற்றியுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். புதியதொரு நாட்டை 
கட்டியெழுப்புவது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் விஞ்ஞாபனத்தில் உள்ளதாகவும் வடக்கு கிழக்கு பிரிவுக்குப் பின் எஞ்சியுள்ள சிறிய பகுதி புதிய நாடாக இருக்கும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐக்கிய தேசியக் கட்சி எவ்வித உடன்படிக்கை செய்துள்ளதென்பது இரகசியம் என்றும் சமஷ்டி என்ற வடிவில் அது அமையுமா என்று தெரியாதெனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை ஒரு ஐக்கிய நாடாக முன்னோக்கி நகர வேண்டும் என்றும் நாட்டை பிரித்து வேறுபடுத்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்...
 
அம்பாந்தோட்டை மக்களுக்குப் பயந்து நான் குருநாகலுக்கு வரவில்லை. என்னுடைய மாவட்டத்தின் மக்களுக்கு நான் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. என்னுடைய மாவட்டத்தையும் தாண்டி மக்கள் என்னை விரும்புகிறார்கள் - ஆதவளித்துள்ளார்கள் இதனாலேயே குருநாகலில் போட்டியிடுகிறேன் எனத் தெரிவித்திருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக இம்முறை குருநாகல் மாவட்டத்தில் தான் களமிறங்கி இருப்பதற்கு இதுவே காரணம் எனவும் அவர் கூறினார்....
 
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமயிலான அரசாங்கம் ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் 61 சிவில் அமைப்புக்கள் இன்றைய தினம் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார். ஐந்து நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

19ம் திருத்தச் சட்டத்தின் குறைபாடுகளை களைதல், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தல், மெய்யான பொருளாதார நிவாரணத்தை மக்களுக்கு அளித்தல், பௌத்த வழிபாட்டுத் தளங்களை பாதுகாத்தல், உள்நாட்டு உற்பத்தியை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குதல் ஆகியனவே இந்த நிபந்தனைகளாகும்.

ஹலால் பிரச்சினை, அலுத்கம சம்பவம் போன்ற பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென சிவில் அமைப்புக்கள் கோரியுள்ளன.

சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்படக் காரணமாக இந்த இந்த சம்பவத்துடன் n;தாடர்புடைய நபர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு தவிர்ந்த புதிய நாடு ஒன்றை ரணில் விக்ரமசிங்க உருவாக்குவார் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஸ்டி ஆட்சி முறைமைக்கு ரணில் இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் சமஸ்டி முறைமை ஆட்சி நிறுவப்பட்டால் அந்தப் பகுதிகளை மீளவும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment