Thursday, August 20, 2015
பீஜிங்: 'இலங்கை பிரதமர் தேர்தலில், ராஜபக் ஷே தோல்வியுற்ற போதிலும்,
புதிய அரசால், சீனாவை ஒதுக்க முடியாது' என, சீன அரசு ஊடகங்கள் உறுதிபட
கூறியுள்ளன.இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக் ஷே, சீனாவின் தீவிர ஆதரவாளர்.
அவர், இலங்கைக்கு, சீனாவிடம் இருந்து, 32ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுத்
தந்தார். அத்துடன், 8,960 கோடி ரூபாய் முதலீட்டில், சீனாவின் கொழும்பு
துறைமுக நகர
திட்டத்திற்கும் அனுமதி தந்தார்.
மேலும், இந்தியாவின்
கவலையை பொருட்படுத்தாமல், இந்திய பெருங்கடல் பகுதியின் அமைதிக்கு
அச்சுறுத்தலாக உள்ள, சீனாவின் 'கடல்சார் சில்க் பாதை' திட்டத்திற்கும்
முதலில் ஆதரவு தெரிவித்தவர்
அவரே.
இந்நிலையில், கடந்த, 17ம் தேதி
நடைபெற்ற இலங்கை பார்லி., தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி,
பெரும்பான்மை இடங்களை கைப்பற்றத் தவறியதால், ராஜபக் ஷேவின் பிரதமராகும்
கனவு தகர்ந்தது. அதனால், இலங்கையில், மீண்டும் பிரதமராக உள்ள, ரணில்
விக்ரமசிங்கே, சீனாவின் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த அனுமதிப்பாரா
என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, சீன அரசின், 'குளோபல் டைம்ஸ்' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி:
மேற்கு
மற்றும் இந்திய ஊடகங்கள் தான், ராஜபக் ஷேவை தீவிர சீன ஆதரவாளராக
சித்தரித்தன. அதே சமயம், சிறிசேன அரசு, அதன் வெளியுறவு கொள்கைகளை மாற்றி
அமைத்து, பெரிய நாடுகளுடனான உறவில், பாரபட்சமற்ற நிலையை கடைபிடிக்க
முனைந்துள்ளது. அதனால், இலங்கையால் சீனாவை
ஒதுக்க முடியாது.
ஒருதலைப்பட்சமான
சார்பு அரசியல், சீனா - இலங்கை இடையிலான உறவை முடக்கும் அல்லது முறிக்கும்
என, வெளிநாடுகள் கருதுகின்றன. அவற்றின் விருப்பமும் அதுவே. ஆனால்,
சீனாவிடம், ஒருகட்சியுடன் உறவு என்ற நிலைப்பாடு கிடையாது; இலங்கையில் எந்த
கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அக்கட்சி, சீனாவுடன் நல்லுறவை பேணும். இவ்வாறு
அதில்
கூறப்பட்டுள்ளது.
வாழ்த்து
இலங்கை
பார்லிமென்ட் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி,
வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு வாழ்த்துக்கள். புதிய அரசின் தலைமையில்,
இலங்கை - சீனா இடையிலான நல்லுறவு மேலும் வலுப்பெற வேண்டும் என்பது, இரு
நாட்டு மக்களின் பொதுவான விருப்பம்.
- ஹுவா சுன்யிங்,
சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர்.
No comments:
Post a Comment