Tuesday, August 4, 2015

ஏர்-இந்தியா விமானங்களில் உணவு சரியில்லை என 95 புகார்கள்!!

Tuesday, August 04, 2015
புது தில்லி:பொதுத்துறை நிறுவனமான ஏர்-இந்தியாவின் விமானங்களில் வழங்கப்படும் உணவுத் தரம் குறித்து கடந்த 3 ஆண்டுகளில் 95 புகார்கள் வந்துள்ளன என்று மக்களவையில், மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
 
இது தொடர்பான கேள்விக்கு, விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா அளித்த பதில்:
 
ஏர்-இந்தியா விமானங்களில் வழங்கப்படும் உணவு சரியில்லை என கடந்த 2012-ஆம் ஆண்டில் பயணிகளிடம் இருந்து 26 புகார்கள் வந்தன. இந்த எண்ணிக்கை 2013-ஆம் ஆண்டில் 30-ஆக அதிகரித்தது. உணவுத் தரம் குறித்து கடந்த ஆண்டில் 27 புகார்களும், நிகழாண்டு ஜூன் வரையில் 13 புகார்களும் பெறப்பட்டுள்ளன என்றார் அவர்.


மத்திய அரசுக்கு நிலுவைத் தொகை: மற்றொரு கேள்விக்கு மகேஷ் சர்மா பதில் அளிக்கையில், "இந்திய விமான நிலையங்களைப் பயன்படுத்தியமைக்காக, உள்நாட்டு - வெளிநாட்டு விமான நிறுவனங்கள் செலுத்த வேண்டிய ரூ.2,739 கோடியை நிலுவைத் தொகையாக வைத்துள்ளன' என்று தெரிவித்தார்.

இதில், அதிகபட்சமாக ஏர்-இந்தியா நிறுவனம் ரூ.1,963 கோடி செலுத்த வேண்டும். ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ், கோ ஏர் உள்ளிட்ட நிறுவனங்களும் பணம் செலுத்தாமல் உள்ளன என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment