எதிர்வரும் தினங்களில் அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை
அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 50 ஆக இருக்குமென ரவி கருணாநாயக்க
எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
இதில் ஐ.தே.க.வுக்கு 33 உம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 17
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவைகளும் கிடைக்குமென அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சரவை இன்று மாலை அல்லது நாளைய தினம் இறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
"ஜனாதிபதியும், பிரதமரும் இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடி இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள உள்ளனர்.
ஆரம்பத்தில்
30 அமைச்சர்கள் நியமிக்கப்படுவர் எனவும் பாராளுமன்றம் கூடிய பின்னர்
மற்றையோர் நியமிக்கப்படுவர்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment