Thursday, July 2, 2015

புதிய அரசு மக்களுக்கு நூறு நாள் வேலை திட்டம் ஒன்றை முன் வைத்தது, இந்த நூறு நாட்களில் நடந்தது என்ன?: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ!

Thursday, July 02, 2015
ஜனவரி எட்டாம் திகதி என்னை தோல்வியடையச் செய்தது வடக்கு, கிழக்கு மக்களாகும். நான் வடக்கு, கிழக்கு வாக்காளர்களாலே  தோல்வியுற்றேன். இருந்தாலும் கவலை இல்லை. ஒரு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு மக்கள் வாக்களித்தனர்.
 
ஆனால் ஒரு புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கு எவ்வித மக்கள் ஆணையும் இதுவரை இல்லை  என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
கண்டி புஜாபிட்டிய பகுதியில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றம் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ   தெரிவித்ததாவது;
புதிய அரசு மக்களுக்கு நூறு நாள் வேலை திட்டம் ஒன்றை முன் வைத்தது, இந்த நூறு நாட்களில் நடந்தது என்ன? எதுவும் நடக்கவில்லை. எங்களை பழி தீர்ப்பது மட்டுமே நடக்கிறது.
 
நான் போதைப்பொருள் வியாபாரத்திற்கு உதவி செய்ததாக சிலர் கூறுகின்றனர்.  ஆனால் எனது ஒன்பது வருட கால ஆட்சியில் ஒரு எதனோல் அனுமதிப் பத்திரமாவது வழங்கப்படவில்லை. ஒரு மதுபான சாலைக்காவது அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. இந்த  அரசு நூறு  நாட்களில் 28 எதனோல் அனுமதிப் பத்திரங்கள் வழங்கியுள்ளது.
 
அரசு எங்களை திருடர்கள் என்று கூறியபோதும்,  இந்த அரசு நியமித்த மத்திய வங்கி ஆளுனர் ஒரு நாளில் நாட்டுக்கு 60 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தி யுள்ளார்.  இதன்மூலம் பெறப்பட்டதரகுத்  தொகை மட்டும் ஒன்றரை பில்லியன் ரூபாவாகும்.
 
மத்திய வங்கி ஆளுனர் தொடர்பாகப் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவிருந்த கோப் அறிக்கைக்கு பயந்தே பாராளுமன்றத்தை கலைத்தனர்  என்றும்  தெரிவித்தார்...........
 
மக்­களின் கோரிக்­கையை தட்­டிக்­க­ழிக்க தனக்கு உரிமை இல்லை என்­பதால் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக நேற்று மெத­மு­ல­னவில் வைத்து விஷேட அறி­விப்புச் செய்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ, தான் எந்த கட்­சியில்? எந்தச் சின்­னத்தில் போட்­டி­யிடப் போகிறார் என்­பதை அறி­விக்­க­வில்லை.
 
எந்தச் சந்­தர்ப்­பத்­திலும், எப்­போதும் நான் கட்­சிக்கும் நாட்­டுக் கும் துரோ­க­மி­ழைக்­க­வில்லை. நாட்­டையும் கட்­சி­யையும் பாது­காக்­க­வென அனைத்து மக்­க­ளையும் எம்­முடன் கைகோர்க்­கு­மாறு அழைப்பு விடுக்­கின்றோம்.
 
மேலும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி மட்­டு­மன்றி மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வா­ளர்­களும் நாட்டின் பாது­காப்பு எதிர்­கா­லத்தை கருத்திற் கொண்டு தங்­க­ளோடு இணைத்து கொள்ள வேண்டும்.' என இந்த விஷேட உரையில் சுட்­டிக்­காட்­டிய முன்னள் ஜனா­தி­பதி மஹிந்த ரஜ­பக்ஷ எந்­த­வொரு இடத்­திலும் தான் சுதந்­திரக் கட்­சியில் போட்­டியட்ப் போவ­தா­கவோ அல்­லது தனித்து போட்­டி­யிடப் போவ­தா­கவோ அறி­விக்­க­வில்லை.
இந் நிலையில் இது தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ரஜ­ப­க்ஷவின் ஊடகப் பேச்­சாளர் ருவன் வெலி­விட்­டவை கேசரி வின­வி­யது.
 
இதற்கு பதி­ல­ளித்த ருவான் வெலி­விட்ட,
 
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தேர்­தலில் போட்­டி­யடப் போவ­தக அறி­வித்­துள்ளார். எனினும் கட்சி, மற்றும் சின்னம் தொடர்பில் எவ்­வித அறி­விப்­புக்­க­ளையும் வெளி­யி­ட­வில்லை. எவ்­வா­றா­யினும் எதிர்­வரும் 9 ஆம் திகதி அனு­ரா­த­பு­றத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள கூட்­டத்தில் மஹிந்த ராஜ­பக்ஷ மேடை ஏறுவார் என நாம் நம்­பு­கின்றோம். அதற்­கான வய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
அவ்வாறு மேடை ஏறுவாறாயொஇன் அதற்கு முன்பதகவே கட்சி சின்னம் தொடர்பில் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். என்றார்.

No comments:

Post a Comment