Sunday, July 19, 2015

நாட்டின் கல்வி அபிவிருத்திக்கான நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை: மகிந்த ராஜபக்ஷ!

Sunday, July 19, 2015
நாட்டின் கல்வி அபிவிருத்திக்காக தாம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு முட்டுக் கட்டை போடப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கல்வி அபிவிருத்திக்காக மகிந்தாதோய திட்டம் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் கட்டியெழுப்பப்ட்டுள்ளன.

ஆனால் அதனை திறக்க முடியாதிருப்பதாக அவர் கூறியுள்ளார்.    
 
புதிய அரசாங்கத்தின் கீழ் அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 25,000 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

குளியாபிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா அதிகரிப்பதாக கூறிய போதும் 7000 ரூபா மட்டுமே அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துக் களமிங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்லது டெலோ சார்பில் அல்லாது சுயேட்சையாக போட்டியிட தான் முடிவெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
   

No comments:

Post a Comment