Sunday, July 19, 2015

அரசியல் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள்!

Sunday, July 19, 2015
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை எதிர்வரும் 22ம் திகதிக்கு பின்னர் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி அடுத்த வாரம் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவுள்ளது.

இதில் வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு நடத்திட்டங்கள் முன்வைக்கப்படும் என்று அமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஜே வி பி எதிர்வரும் 22ம் திகதி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவிருப்பதாக, அதன் பொது செயலாளர் ரில்வின் செல்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எதிர்வரும் 30ம் திகதி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவுள்ளது.            

No comments:

Post a Comment