Saturday, July 18, 2015

மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத் தேர்தலுக்கு பணம் திரட்டினார்: ராஜீவ விஜேசிங்க!

Saturday, July 18, 2015
மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத் தேர்தலுக்கு பணம் திரட்டினார் என முன்னாள் உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேர்தலில் செலவழிக்க பணம் இருக்கவில்லை. இதனால் மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல் மோசடியின் ஊடாக தேர்தலுக்கு பணம் திரட்டப்பட்டுள்ளது.
 
இந்த மோசடியுடன் ரணிலும் கட்சி உறுப்பினர்களும் தொடர்புபட்டமைக்கு ஆதாரங்கள் உண்டு.எனக்கு ரவி கருணாநாயக்கவை பிடிக்காது எனினும் மத்திய வங்கி பிணை முறியுடன் நிதி அமைச்சருக்கு தொடர்பில்லை” என பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்திருந்தார். இதன்மூலம் மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கலுடன் ரணில் விக்ரமசிங்கவிற்கு நேரடித் தொடர்பு காணப்பட்டமை அம்பலமாகியுள்ளது.
 
ரணில் விக்ரமசிங்கவின் அழுத்தம் காரணமாகவே மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தீர்மானங்களை எடுத்துள்ளார். அதனை அவரே ஒரு தடவை எம்மிடம் கூறினார்.
இந்த உண்மை வெளிப்பட்டதன் காரணமாக எம்மை இது குறித்து பேச விடமால் இருக்க ரணில் முயற்சித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment