Monday, July 27, 2015
டமாஸ்கஸ்:
பாரீஸ் நகர தெருக்களில் பிணங்களாக குவிக்கப் போகிறோம் என்று பிரான்ஸை
சேர்ந்த தீவிரவாதி கூறும் வீடியோவை ஐஎஸ்ஐஎஸ் வெளியிட்டுள்ளது.ஐஎஸ்ஐஎஸ்
தீவிரவாதிகள் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பிரான்ஸை சேர்ந்த
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் தனது முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு
சிரியாவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரை மலை உச்சியில் முழங்காலிட
வைத்துள்ளார். பின்னர் அந்த தீவிரவாதி ராணுவ வீரர் பின்னால் நின்று கொண்டு
அவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டார்.
இதில்
பலியான வீரரை தீவிரவாதி மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிவிட்டார். அதன்
பிறகு தீவிரவாதி கூறுகையில், பிரான்ஸ் தலைநகர் பாரீஸின் தெருக்களில்
பிணங்களாக குவிக்கப் போகிறோம் என்றார்.இந்த வீடியோ சிரியாவில் உள்ள ஹமா
மாகாணத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. முன்னதாக கடந்த மாதம்
பிரான்ஸின் கிழக்குப்பகுதியில் உள்ள கேஸ் நிறுவனத்திற்குள் புகுந்த
தீவிரவாதி ஒருவரை கொலை செய்து அவரின் தலையை வேலியில்
தொங்கவிட்டார்.முன்னதாக கடந்த ஜனவரி மாதம் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ
பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமான
சுட்டதில் 12 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment