Monday, July 27, 2015

நாட­ளா­விய ரீதியில் தேர்­தல்கள் சட்­டங்­களை மீறிய குற்­றச்­சாட்டுத் தொடர்பில் 180 பேர் கைது!

Monday, July 27, 2015
நாட­ளா­விய ரீதியில் தேர்­தல்கள் சட்­டங்­களை மீறிய குற்­றச்­சாட்டுத் தொடர்பில் 180 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் நேரடி கட்­டுப்­பாட்டின் கீழ் இடம்­பெற்று வரும் தேர்­தல்கள் குறித்த சுற்­றி­வ­ளைப்­புக்கள் மற்றும் தேர்தல் முறைப்­பா­டுகள் தொடர்­பி­லான விசா­ர­ணை­களின் பிர­கா­ரமே 180 பேரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
 
தேர்தல் அறி­விக்­கப்­பட்ட தினத்­தி­லி­ருந்து நேற்று மாலை 4.00 மணி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் சுற்­றி­வ­ளைப்­புக்கள் மற்றும் முறைப்­பாட்டு விசா­ர­ணைகள் உள்­ளிட்ட 120 சம்­ப­வங்கள் தொடர்பில் இந்த 180 பேரும் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார். இதில் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் நேரடி கட்­டுப்­பாட்டின் கீழ் இடம்­பெற்ற 65 சுற்­றி­வ­ளைப்­புக்­களில் 156 பேரும் 56 முறைப்­பா­டுகள் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் 24 பேரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர சுட்­டிக்­காட்­டினார்.
 
இத­னி­டையே தேர்தல் சட்­டங்­களை மீறி­யமை தொடர்பில் 541 முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக தேர்­தல்கள் திணைக்­க­ளத்தின் தேர்தல் முறைப்­பாட்டுப் பிரிவு தெரி­விக்­கின்­றது. பத­விகள் வழங்­கப்­பட்­டமை, பதவி உயர்­வுகள் வழங்­கப்­பட்­டமை மற்றும் இட­மாற்­றங்கள் உள்­ளிட்­டவை தொடர் பில் இதில் 145 முறைப்­பா­டுகள் அடங்­கு­வ­தா­கவும் இதனை விட சுவ ­ரொட்டி ஒட்­டுதல், பொருட்களை விநி­யோ­கித்தல் போன்ற முறைப்பா­டு­களும் கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக அந்த பிரிவு மேலும் குறிப்­பிட்­டது.
 
தேர்தல் சட்­டங்­களை மீறி­யமை தொடர்­பி­லான அதிக முறைப்­பா­டுகள் கொழும்பு மாவட்­டத்தில் இருந்தே தமக்கு கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக தேர்­தல்கள் திணைக்­கள முறைப்­பாட்டுப் பிரிவு குறிப்­பிட்டது. கொழும்பிலிருந்து 86 முறைப்­பாடு­களும் பது­ளையிலிருந்து 42 முறைப்­பா­டு­களும் ஹம்பாந்­தோட்­டையில் இருந்து 29 முறைப்­பா­டுகளும் தமக்கு இவ்­வாறு கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக அந்த பிரிவு மேலும் குறிப்­பிட்­டது.
 
இதே­வேளை 26 வன்­முறைச் சம்­ப­வங்கள் அடங்­க­லாக 536 தேர்­தல்கள் தொடர்­பி­லான சட்டமீறல்கள் தொடர் பில் தமக்கு பதி­வா­கி­யுள்ள­தாக தேர்­தல்கள் கண்­கா­ணிப்பு அமைப்பான கபே குறிப்பிட்டது. கபே அமைப்பின் தலைவர் கீர்த்தி தென்னக்கோன் இந்த தகவலைத் தெரிவித்தார்.
இதனைவிட பெப்ரல் அமைப்புக்கு நேற்று பகல் வரை 398 முறைப்பாடு கள் கிடைக்கப் பெற்றதாக அந்த அமைப்பு குறிப்பிட்டது.

No comments:

Post a Comment