Wednesday, June 24, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
ஆகியோருக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு
இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளது.
எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகளின் பொருட்டு இருவருக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் இந்த குழு அமைக்கப்பட்டது.
அண்மையில் அந்த குழு ஜனாதிபதி மைத்;திரிபால சிறிசேனவை சந்தித்தது.
இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.
அண்மையில்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது,
முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதிகளுக்கு இடையில் நல்லிணக்கத்தை
ஏற்படுத்தும் வகையில் ஆறுபேர் கொண்ட இந்த இணக்கப்பாட்டு குழு
ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment