Wednesday, June 24, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது!

Wednesday, June 24, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அடிப்படைவாத பிரிவினரிடமிருந்து உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாதுகாப்பு பிரிவினர் ஆராய்ந்துள்ளதாக நேற்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆவணமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய்மூல கேள்வியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக பொது நல்லிணக்க மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் முன்வைத்த ஆவணத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரி;க்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஓய்வு பெற்றபோது அவருக்கு 138 காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.

ஆனால் அந்த தொகை தற்போது 66 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஓய்வு பெற்ற தருணத்தில் 102 காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், தற்போது அந்த தொகை 105 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
            

No comments:

Post a Comment