Tuesday, June 2, 2015

பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்கத் தயார் என முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா!

Tuesday, June 02, 2015
பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்கத் தயார் என முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக தம்மை நியமிக்குமாறு மஹிந்த ராஜபக்ஸ கோரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.மஹிந்த ராஜபக்ஸ மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருவதாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வெற்றியீட்ட வேண்டுமாயின் அவரை தேர்தலில் இணைத்துக்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். 1994ம்  ஆண்டில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை முன்னிலைப்படுத்தி பொதுஜன ஐக்கிய முன்னணி தேர்தல்களில் வெற்றியீட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவிற்கு பாரியளவிலா மக்கள் ஆதரவு கிடைப்பதாகவும் அதனை சந்தைப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த போட்டியிடுவதாக கேள்விப்பட்டது முதல் ரணில் பீதியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment