Monday, June 29, 2015

நெருக்கடிகள் குறைவடையும் வகையில் பொதுமக்கள் செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Monday, June 29, 2015
நெருக்கடிகள் குறைவடையும் வகையில் பொதுமக்கள் செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
கண்டிக்கு  விஜயம் செய்திருந்த அவர் தலதா மாளிகையில் சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் இந்த கருத்தை வெளியிட்டார்.
 
பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பாக நாளை மறுதினம் அறிவிக்கப்படுமா என ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படும் உறுப்பினர்களுக்கு சிறிலங்கா சுதந்திர கட்சியில் வேட்புமனு வழங்கப்படாது என வெளியான தகவல் தொடர்பாகவும் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
 
இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமையே தீர்மானங்கள் பற்றி தெரிந்து கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.
முன்னாள் கலாச்சார அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்கவை பல மணித்தியாலங்கள் விசாரித்தனர்.
பௌத்த விகாரைகளுக்கு நிதியொதுக்கீடுகளை எவ்வாறு மேற்கொண்டார் என்ற அடிப்படையில் அவர் ஏன் அவ்வாறான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
 
அதேவேளை, தம்முடன் இருப்பவர்களுக்கு வேட்பு மனுக்கள் வழங்கப்படுகிறதா இல்லையா என்பதை நேரம் வரும் போது பார்த்துக்கொள்ள முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்....
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பதற்காக தங்காலைக்கு வாகனத் தொடரணியொன்று செல்ல உள்ளது. தங்காலையில் அமைந்துள்ள மஹிந்தவின் கார்ல்டன் இல்லத்திற்கு இவ்வாறு வாகனத் தொடரணிகள் செல்ல உள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் கட்சித் தலைவர்கள் எதிர்வரும் 1ம் திகதி வாகனத் தொடரணியாக சென்று மஹிந்தவை அரசியலில் ஈடுபடுமாறு அழைக்க உள்ளனர்.
 
கூட்டமைப்பு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதன் போது முன்னாள் ஜனாதிபதி விசேட அறிப்பு ஒன்றை விடுக்க உள்ளார்.
 
மஹஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்தன, தேசிய சுதந்திரன் முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, டலஸ் அழப்பெரும, குமார வெல்கம, எஸ்.எம். சந்திரசேன, காமினி லொக்குகே, மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்டவர்களைக் கொண்ட 15 பேர் அடங்கிய கமிட்டியின் தீர்மானத்திற்கு அமைய, முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்கு வாகனத் தொடரணியாக சென்று அவரை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.
 
நாட்டை பாதுகாக்க தேர்தலில் போட்டியிடுமாறு மஹிந்தவிடம் கோரப்பட உள்ளது. இந்த கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டால் எதிர்வரும் ஜூலை மாதம் 9ம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment