Monday, June 29, 2015

புலிகளின் சீருடையுடன் கைதானவர்களுக்கு விளக்கமறியல்!

Monday, June 29, 2015
புலிகளின் சீருடையை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதடி பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் இன்று உத்தரவிட்டார்.
 
புதுக்குடியிருப்பு மற்றும் கைதடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மேற்படி இரு சந்தேகநபர்களிடமிருந்து புலிகள் இயக்கத்தினர் பயன்படுத்தும் சீருடையொன்று, 3 தொப்பிகள், 2 ஜாக்கட்கள் என்பன மீட்கப்பட்டன.
 
விடுதலைப் புலிகளின் சீருடையை வைத்திருந்து, அதனை வைத்து புகைப்படம் எடுத்து வெளிநாட்டில் பிரஜாவுரிமையைப் பெறும் முயற்சியில் ஈடுபட்ட மேற்படி இருவரும், அப்புகைப்படங்களை பிரதியாக்க முற்பட்டபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment