Friday, January 23, 2015
இலங்கை::இலங்கையில் பாரியளவிலான போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய முக்கிய இரு புள்ளிகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை::இலங்கையில் பாரியளவிலான போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய முக்கிய இரு புள்ளிகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவரும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இலங்கையில் முக்கிய போதைப் பொருள் வியாபாரியாக கருதப்படும்
வெலே சுதா என்பவருடன் நெருங்கிய உறவை இவர்கள் வைத்திருந்ததாகவும், கோடிக்கணக்கான பணம் மற்றும் பொருட்களை இவர்கள் தனதாக்கிக் கொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இச்சந்தேக நபர்கள் தொடர்பில் சாட்சிகள் பல வெளிப்பட்டுள்ளதாகவும், இவர்களை உடன் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment