Monday, January 05, 2015
இலங்கை::வெளிநாட்டு சக்திகளினால் ஆட்டுவிக்க முடியாத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டச் செய்வோம் என சிரேஸ்ட அமைச்சர் ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை::வெளிநாட்டு சக்திகளினால் ஆட்டுவிக்க முடியாத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டச் செய்வோம் என சிரேஸ்ட அமைச்சர் ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சில நாடுகள் தங்களுக்கு தேவையான வகையில் இலங்கையை ஆட்டுவிக்க சிலரை ஜனாதிபதியாக்க முயற்சிக்கின்றன.
அண்மைக்காலமாக கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. கிராம மக்கள் நன்றி மறந்து ஒரு போதும் செயற்பட மாட்டார்கள்.
எதிர்வரும் 8ம் திகதி நாட்டு மக்கள் மதிநுட்பமான தீர்மானம் எடுப்பார்கள் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் கிடையாது.
எல்லோரிடமும் குறைகள் உண்டு, குறைகள் இல்லாத மனிதர்கள் கிடையாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பழையவர்களுக்கு இடமில்லை என குற்றம் சுமத்தப்படுகின்றது. பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
க
டந்த காலங்களில் கட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சித் திட்டங்கள் வெற்றி கொள்ளப்பட்டுள்ளன.
சந்திரிக்கா, மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றி நான் பேச விரும்பவில்லை.
அவ்வாறு பேசுவதன் மூலம் அவர்களுக்கு தேவையற்ற பிரபல்யம் கிடைக்கப்பெறும் என ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆளும் கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் இன்று இணைந்து கொள்ள உள்ளதாக எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டவர்களில் ரட்னசிறி விக்ரமநாயக்க மற்றும் அவரது மகன் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment