Tuesday, January 06, 2015
ஊட்டி::கேரள மாநிலம் வயநாடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அட்டப்பாடி அருகே வனத்துறை அலுவலகம் மற்றும் காவல் நிலையம் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, கேரள எல்லையில் உள்ள நீலகிரி மாவட்ட காவல் நிலையங்கள், வனத்துறை அலுவலகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதிரடி படையினரும் வனத்தில் கண்காணித்து வருகின்றனர். தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லையோரத்தில், தமிழக அதிரடி படையினர் மூன்று குழுக்களாக பிரிந்து நேற்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். எஸ்.பி. செந்தில்குமார் தலைமையில் ஒரு பிரிவினர் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கார்குடியில் இருந்து கூகுல் நாரதி வழியாகவும், 2வது குழுவினர் கார்குடி ஒன்னாரெட்டி வழியாகவும், மூன்றாவது குழுவினர் கேரிங்டன், மட்டாஸ், தனியாகண்டி, கிண்ணக்கொரை, காமராஜர் நகர், இந்திரா நகர், ஜே.ஜே. நகர், இரியசீகை வழியாக வன கண்காணிப்பு கோபுரம் வரை தேடுதல் வேட்டை நடத்தினர்.
வால்பாறையில் கேரள எல்லை பகுதியில் உள்ள முருகாளி எஸ்டேட் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள காவல்நிலையம் முன் துப்பாக்கி ஏந்திய போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
No comments:
Post a Comment