Tuesday, January 6, 2015

கடந்த வாரம் 162 பயணிகளுடன் ஜாவா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கிய ஏர் ஆசியா விமானத்தின் 5-வது பாகம் கண்டுபிடிப்பு: மேலும் 4 உடல்கள் மீட்பு!

Tuesday, January 06, 2015
ஜகார்த்தா::ஜகார்த்தா விமானநிலையத்தில் இருந்து கடந்த வாரம் 162 பயணிகளுடன் ஏர் ஆசியா விமானம் சிங்கப்பூருக்கு கிளம்பியது. அந்த விமானம் நடுவானில் திடீரென காணாமல் போனது. தற்போது அந்த விமானத்தை ஜாவா கடற்பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விமானத்தின் 5-வது பாகத்தை நேற்று இந்தோனேஷிய கடற்படை கண்டுபிடித்து கைப்பற்றியது. அத்துடன், கடலில் மிதந்த மேலும் 4 பேரின் உடல்களையும் மீட்டது.இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சுரபயா விமானநிலையத்தில் இருந்து கடந்த வாரம் ஞாயிறு அதிகாலை 162 பயணிகளுடன் ஏர் ஆசியா விமானம் சிங்கப்பூருக்கு கிளம்பியது. இந்தோனேஷிய வான் எல்லையில் அந்த விமானம் பறந்தபோது, கடுமையான மேகமூட்டம் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, விமான கட்டுப்பாட்டு அறையுடன் அந்த விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

ஜாவா கடற்பகுதியில் ஏர் ஆசியா விமானத்தின் பாகங்கள் மிதப்பதாக இந்தோனேஷிய கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் 20 போர் விமானங்கள் உட்பட 27 போர்க் கப்பல்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தன.  போர்னே நாட்டின் பங்கலான்பன் நகருக்கு அருகே உள்ள கடற்பகுதியில் நேற்று முன்தினம் 30 உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. அத்துடன், கடலின் மிதந்த விமானத்தின் 4 பாகங்களையும் மீட்பு குழுவினர் மீட்டனர்.

வானிலை மோசமடைந்ததால், தேடுதல் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.பங்கலான்பன் அருகே நேற்று காலை மீண்டும் தேடுதல் பணி நடைபெற்றது. இந்தோனேஷியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு கடற்படையினர் விமானம் மற்றும் கப்பல்களில் ஆழ்கடலுக்குள் தேடும் அதிநவீன ரேடார் கருவி மூலம் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது ஆழ்கடலுக்குள் மூழ்கிய நிலையில் மேலும் 4 உடல்கள் மீட்கப்பட்டன. அத்துடன், விமானத்தின் 5-வது பாகமும் கண்டுபிடிக்கப்பட்டது என்று இந்தோனேஷிய கடற்படை மீட்பு குழுவின் துணை தலைவர் ததாங் ஜெய்னுதீன் நேற்றிரவு ஜகார்த்தாவில் கூறினார்.

No comments:

Post a Comment