Friday, January 02, 2015
இலங்கை::காத்தான்குடி 06 ஜென்னத் மாவத்தையில் சமூர்தி பயானிகளுக்கான 2500/= ரூபாய் வழங்கும் நிகழ்வு இன்று 01.01.2015 வியாழக்கிழமை)ஜென்னத் பாலா பாடசாலை மண்டபத்தில் முன்னால்கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் தலைமையில் நடைபெற்றது.
இலங்கை::காத்தான்குடி 06 ஜென்னத் மாவத்தையில் சமூர்தி பயானிகளுக்கான 2500/= ரூபாய் வழங்கும் நிகழ்வு இன்று 01.01.2015 வியாழக்கிழமை)ஜென்னத் பாலா பாடசாலை மண்டபத்தில் முன்னால்கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் பிரதம அதிதயாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லா கலந்து கொண்டு உரையாற்றுகையில் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் படு மோசமாக தோல்வியுற்று ஒன்பதாம் திகதி வீதியில் நிற்கப் போகும் மைத்திரிக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் எனத் தெரிவித்தார்.
அமைச்சரின் உரையினை கேட்டுக் கொண்டிருந்த சுமார் 350 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களின் ஆதரவு மஹிந்த ராஜபக்சவுக்குதான் எனக்கூறி தங்களின் கைகளை உயர்திக்காட்டியது நிகழ்வின் விசெட அம்சமாகும்..
நன்றி உள்ள சமூகமாக நாம் இருக்க வேண்டும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா!
புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சுமார் 600 மேற்பட்ட ஏழை மாணவ,மாணவிகளுக்கான இலவச கைப்பை,அப்பியாச புத்தகங்கள்,பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (01.01.2015 வியாழக்கிழமை) அன்வர் வித்தியாலயத்தில் கேட்போர் மண்டபத்தில் நடை பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.எம்.நியாஸ் தலைமையில் நடை பெற்ற மேற்படி நிகழ்விற்கு பிரதமஅதிதயாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்து கொண்டு உரையாற்றுகையில் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந் ராஜபக்சவிற்கு வாக்களிப்பதன் மூலம் நன்றி உள்ள சமூகமாக நாம் இருக்க வேண்டும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
ஜனாதிபதியை மாற்றுவோம் என முடிவு செய்வது முட்டாள்தனமானது”: ஹிஸ்புல்லாஹ்!
குடும்பம் என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் அதற்காக கணவனையே மாற்ற முயற்சிப்பது சரியா இவ்வாறு கேள்வி எழுப்பினார் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ எம் ஹிஸ்புல்லா நேற்று காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்விலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை ஆழ்வதென்றால் பல பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் அதற்காக ஜனாதிபதியையே மாற்றுவோம் என முடிவுசெய்வது முட்டாள்தனமான ஒரு செயற்பாடாகும். நாம் இன்னும் அபிவிருத்தி அடையவேண்டும் எமது சமூகம் இன்னும் அபிவிருத்தியடைய வேண்டும் நாடு மேலும் அபிவிருத்தியடைய வேண்டும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி நிச்சயம் வெற்றியீட்டுவார். சரத் பொன்சேக்காவை விட மைத்திரிபால இம்முறை படு தோல்வியடைவார். சென்ற முறை இப்பகுதியிலிருந்து நீங்கள் 12000 வாக்குகள் மஹிந்த ராஐபக்ஷவுக்கும் 10000 வாக்குகள் சரத் பொன்சேக்காவுக்கும் இட்டீர்கள் அவ்வாக்குகள் வீணாகிப்போய்விட்டன. நன்றாக சிந்தித்து வாக்களியுங்கள்.
தற்போது இனவாதம் பற்றிப்பேசுகின்றனர். சந்திரிக்கா அம்மையாரின் காலத்திலேயே மாவனல்லலையில் 3 பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டன. அதேபோல் ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் பல முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர் இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment