Friday, January 02, 2015
இலங்கை::ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே வீ பி போன்ற இனவாதிகள் இணைந்துள்ள ஒரு கூட்டே இந்த மைத்திரி பொது வேட்பாளர் அணியாகும்: தேசிய ஐக்கிய மக்கள் கட்சி!
ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதன் மூலமாக இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே வீ பி போன்ற இனவாதிகள் இணைந்துள்ள ஒரு கூட்டே இந்த மைத்திரி பொது வேட்பாளர் அணியாகும். இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் வெளிநாட்டு சதிகாரர்கள் மேலும் மெருகூட்டிக் கொண்டிருக்கின்றனர்.
முஸ்லீம்களுக்கோ அல்லது தமிழர்களுக்கோ ஒரு சதமேனும் கிடைக்கவிடாது மகிந்த அரசை தடுத்து வந்த இலங்கையின் இனவாதிகள், பொது பல சேனாவை உருவாக்கி திரைமறைவில் நின்று செயற்பட்ட அதே கூட்டு இப்போது பொது வேட்பாளர் பக்கமாக தமது கை வரிசையை காட்டத்தயார் நிலைமையில் உள்ளனர்.
மக்களுக்குத் தெரியாத பல ஒப்பந்தங்களை இவர்கள் தமக்கிடையே செய்துள்ளனர். அதில் தமது சுயநலத் தேவைகளை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் நிலைமையே பெரிதும் காணப்படுகின்றது.
பொது வேட்பாளர் என்பவர் மூலமாகவே இனவாத, சிந்தனை வெளிக்கொணர முடியுமான நிலைமை காணப்படுவதை பேரினவாத சிந்தனைகள் பெரிதும் ஒப்புக்கொள்கின்றன. அதனாலேயே சிறுபான்மை மக்களின் பாதுகாப்பாய் அமைந்த ஜனாதிபதி முறையை ஒழிக்க இவர்கள் ஓன்று சேர்ந்து செயற்படுகின்றனர். ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் திட்டத்தை இரவோடிரவாக இவர்கள் அமுல்நடத்த எமது தலைமைகளை அவர்கள் பயன் படுத்திக் கொள்கின்றனர்.
இலங்கையில் வாழும் எந்தவொரு இனத்துக்குமான தனி நலன்களைக் கருத்தில் கொள்ள முடியாத ஒரு கூட்டாகவே பொதுக் கூட்டமைப்பு அமைந்திருக்கின்றது. சந்திரிக்கா அம்மையார், மங்கள சமரவீர, ரணில், சஜித், பொன்சேகா, ரவூப் ஹக்கீம், சம்பந்தன், பாட்டாளி சம்பிக்க, அனுரதிசநாயக்க, மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு மேலைத்தேய சிந்தனை என்பவற்றை ஒரே கூட்டில் வைத்து முகம் கொடுக்க முடியுமான ஒரு அரசு அமையுமானால் அதன் நிலை என்ன. அதன் மூலமாக இலங்கை மக்கள் அடையக் கூடிய லாபங்கள் என்பதையெல்லாம் கூட்டிக் கழிக்கின்ர போது லாபமடையக் கூடிய நிலை எங்குமே தெரியமுடியாது.
முஸ்லீம் சமூகம் மிக இக்கட்டான நிலைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை இது இன்று உருவாக்கி இருக்கின்றது. நியாயமில்லாத கட்சித் தாவல்களை நியாயப்படுத்த எந்தவொரு காரணமும் தெரியாது பலரும் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். மக்கள் நன்றிக் கடன் செலுத்தக் காத்துக் கொண்டிருக்கின்றனர். நீண்ட காலமாக ஆட்சி பீடத்தை குறிவைத்து வரும் ஐ.தே.க வின் அதிதீவிர ஆதரவாளர்கள் மாத்திரமே முஸ்லிம் சமூகத்தின் முன்னணியில் நின்று இன்று சமூக நோக்கு என்ற போர்வையை தமக்குத் தாமே போர்த்தி செயற்படுகின்றனர்.
முஸ்லிம்கள் அரசியல் நிலையை விளங்கிக் கொள்ள முடியுமானவர்கள், இந்த நாட்டில் இனவாதமற்ற ஒரு அரசை உருவாக்கும் ஆளுமை மிக்க தலைமை அதிமேன்மை தாங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களாலேயே முடியுமான ஒன்றாகும். அவரது வெற்றியின் பங்காளராகுவதற்கான அழைப்பை நாம் எமது சமூகத்தை நோக்கி விடுக்கின்றோம். நீண்ட, தீர்க்க தரிசனமிக்க திட்டங்கள் மூலமாக நாம் சமூகத்தின் எதிர்காலம் பற்றிய கனவை நனவாக்கிக் கொள்ள இந்த சந்தர்ப்பத்தை நாம் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முஹம்மத் அன்வர்
தலைவர்
தேசிய ஐக்கிய மக்கள் கட்சி
தலைவர்
தேசிய ஐக்கிய மக்கள் கட்சி
No comments:
Post a Comment