Sunday, January 4, 2015

சந்திரிகா ஆட்சிக்காலத்திலும் அதற்கு முன்னைய காலத்திலுமே புலிகள் பலமடைந்தனர்: பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச!

Sunday, January 04, 2015
இலங்கை::முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்திலும் அதற்கு முன்னைய அரசாங்கங்களின் காலத்திலுமே  புலிகள் பலமடைந்தனர் என,  பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌குற்றஞ்சாட்டியுள்ளார்.    
 
ல்கமுவவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.   அவர் மேலும் தெரிவிக்கையில்,   ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவுக்கு எதிராக முன்வைக்கப்படும் ஊழல் உட்பட ஏனைய குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை.  
 
ஊழல்கள் மூலம் தனக்கு தேவையானவற்றை ஜனாதிபதி பெற விரும்பியிருந்தால்  யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவராமல் தொடர்ந்திருக்கலாம்.  இருப்பினும் யுத்தம் நடைபெற்ற காலமே ஊழலுக்கான சிறந்த காலமாக இருந்தது. ஆயுத கொள்வனவுகளில் ஊழல் காணப்பட்டது.  
 
எனினும் ஜனாதிபதி  புலிகளை தோற்கடித்து, நாட்டை அபிவிருத்தி செய்துள்ளார்.  மக்கள் தற்போது அபிவிருத்தியின் முன்னேற்றங்களையே அனுபவித்து வருகின்றனர். ஜனாதிபதி ஊழல்களில் ஈடுபட்டிருந்தால் மக்களுக்கு அபிவிருத்தி கிடைத்திக்காது.  
 
 தற்போது வீதிகள் பெருந்தெருக்கள் குறித்து குறிப்பிடுகின்றனர். கட்டுநாயக்கா நெடுஞ்சாலைகள் திட்டம் பல வருடங்களாக முன்னெடுக்கப்படாமலிருந்தது.    ஆனால் நாங்களே ஒப்பந்தக்காரர்களுக்கு பணத்தை வழங்கி திட்டத்தை முன்னெடுத்தோம்.    இந்தத் திட்டங்களில் ஊழல் இருந்திருந்தால் அவை நிறைவேறியிருக்காது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தின் போதும், அதற்கு முன்னைய அரசாங்கங்களின் கீழும் விடுதலைப் புலிகள் பலமடைந்தனர்என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment