Saturday, January 3, 2015

மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக வந்தால் சந்­தி­ரிகா குமா­ர­துங்க பிர­தமர் பத­வியை பெறு­வ­தற்கும் முயற்­சி!

Saturday, January 03, 2015
இலங்கை::மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக வந்தால் சந்­தி­ரிகா குமா­ர­துங்க பிர­தமர் பத­வியை பெறு­வ­தற்கும் முயற்­சிகள் இடம்­பெ­று­வ­தாக தெரி­கின்­றது. இந்த நாட்டை சமஷ்டி முறைக்கு கொண்டு செல்ல முயற்­சித்­தவர் சந்­தி­ரி­காதான் என்று மேல் மாகாண முன்னாள் அமைச்சர் மற்றும் ஜாதிக ஹெல உறு­ம­ய­வி­லி­ருந்து விலகி தற்­போது ஜனா­தி­பதி மஹிந்­த­வுக்கு ஆத­ரவு வழங்­கு­ப­வ­ரு­மான உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.
 
2000 ஆம் ஆண்டு தீர்வுப் பொதி மூலம் சமஷ்­டியை கொண்­டு­வர சந்­தி­ரிகா முயற்­சித்தார். ஆனால் அதிஷ்­ட­வ­சமாக அது நிறை­வே­ற­வில்லை. தற்­போது ஈழம் கனவை நன­வாக்க சந்­தி­ரிகா முயற்­சிக்­கின்றார் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
 
கொழும்பில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்;
மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் ஒற்­றை­யாட்சி குறித்து எதுவும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என்று நாங்கள் கூறி­வந்தோம். சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்­டிய எந்த அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்­தையும் செய்­ய­மாட்டேன் என்று மைத்­தி­ரி­பால கூறி­யுள்ளார்.
ஆனால் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமையை ஒழிப்­ப­தற்கோ அல்­லது அதில் உள்ள அதி­கா­ரங்­களை குறைப்­ப­தற்கோ சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்­த­வேண்டும் என்று நாட்டில் இதற்கு முன்னர் இரண்டு முறை தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. 1987 ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்று வழங்­கப்­பட்­டது. பின்னர் 2002 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை குறைத்து பிர­த­ம­ருக்கு வழங்­கு­வ­தற்கு முயற்­சித்­த­போது அதற்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று உயர்­நீ­தி­மன்றம் கூறி­யது.
 
சட்ட நிலைமை இவ்­வாறு இருக்­கையில் எவ்­வாறு மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்­தாமல் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமையை ஒழிக்க முடியும்? ஜனா­தி­பதி முறையில் என்ன செய்­வ­த­தென்­றாலும் அதற்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு அவ­சி­ய­மாகும். மைத்­தி­ரி­பால சிறி­சேன எனது இந்தக் கேள்­விக்கு எட்டாம் திக­திக்கு முன்னர் பதில­ளிக்­க­வேண்டும். மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி பத­வியை வகிக்­கவே முயற்­சிக்­கின்றார். மேலும் ஒற்­றை­யாட்சி முறைமை நீக்­கப்­ப­டுமா? இல்­லையா என்­ப­தற்கும் மைத்­தி­ரி­பால பதி­ல­ளிக்­க­வேண்டும்.
 
சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க பிர­பா­க­ரனை ''மிஸ்டர் பிர­பா­கரன்'' என்று கூறி­யுள்ளார். இதன்­மூலம் உலகின் மிலேச்ச பயங்­க­ர­வாத தலை­வனை கௌர­வித்­
துள்ளார். பிர­பா­கரன் தனது இனத்­தையே அழித்­தவர். மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக வந்தால் சந்­தி­ரிகா குமா­ர­துங்க பிர­தமர் பத­வியை பெறு­வ­தற்கும் முயற்­சிகள் இடம்­பெ­று­வ­தாக தெரி­கின்­றது. இந்த நாட்டை சமஷ்டி முறைக்கு கொண்டு செல்ல முயற்­சித்­தவர் சந்­தி­ரி­காதான். 2000 ஆம் ஆண்டு தீர்வுப் பொதி மூலம் அதனை கொண்­டு­வர முயற்­சித்தார். ஆனால் அதிஷ்­ட­வச­மாக அது நிறை­வே­ற­வில்லை. தற்­போது ஈழக் கனவை நன­வாக்க சந்­தி­ரிகா முயற்­சிக்­கின்றார்.
 
எதி­ர­ணி­யிடம் முஸ்­லிம்­க­ளுக்­கான தனி அலகை கோர­வில்லை என்று முஸ்லிம் காங்­கிரஸ் தெரி­வித்­துள்­ளது. இந்த இடத்தில் ஒரு கேள்­வியை எழுப்­பு­கின்றோம். மு.கா. அர­சாங்­கத்­தி்டம் இந்த கோரிக்­கையை முன்­வைத்­தது. அர­சாங்கம் அதற்கு இணங்­க­வில்லை. எனவே அவர்கள் எதி­ர­ணி­யுடன் பேச்சு நடத்­தி­விட்டு அங்கு சென்­றனர். அப்­ப­டி­யானால் தனி முஸ்லிம் அலகை வழங்­கு­வ­தற்கு எதி­ரணி இணங்­கி­யுள்­ளது.

1931ஆம் ஆண்டு சவுத்ரி என்­பவர் பாகிஸ் தான் என்ற நாட்டை உரு­வாக்­கு­வ­தற்­கான வரை­ப­டத்தை தயா­ரித்தார். அந்த வரை­பட புத்­த­கத்தில் இலங்­கையின் கிழக்கு மாகா­ணத்தில் கல்­முனை பிர­தே­சத்தை பிர­தா­ன­மா­கக்­கொண்டு நச­லிஸ்தான் என்ற ஒரு நாட்­டுக்­கான யோச­னை­யையும் முன்­வைத்­தி­ருந்தார். தற்­போது முஸ்லிம் காங்­கிரஸ் அதே கல்முனையை பிரதானமாகக்கொண்டு முஸ்லிம் தனி அலகை கோருகின்றது. அதனை ஜனாதிபதி நிராகரித்துவிட்டார்.
 
நாட்டில் பிரிவினைவாத அலை உள்ளது. ஆனால் அந்த அலையை நாட்டை நேசிக்கின்றவர்கள் தோற்கடிக்கவேண்டும். மைத்திரிபாலவின் தரப்பில் ஈழம் மற்றும் சமஷ்டிவாதிகளே உள்ளனர். சந்திரிகா குமாரதுங்க 2005 ஆம் ஆண்டுக்கு முன்னரான வரலாற்று உலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.

No comments:

Post a Comment