Saturday, January 3, 2015

உள்நாட்டு தேர்தல்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் எமக்கு அறிவுரைகளை வழங்கத் தேவையில்லை: இலங்கை!


Saturday, January 03, 2015
இலங்கை::இலங்கை தேர்தல் அமைதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை குறித்து இலங்கை அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இத்தகைய அறிக்கை உள்நாட்டு விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டுக்கான நோக்கம் மற்றும் பக்கச்சார்பு குறித்த கேள்வியை உருவாக்கியுள்ளது.

1931ம் ஆண்டு தொடக்கம் இலங்கைல் குறித்த கால இடைவெளிக்குள் அமைதியாகவும், இயல்பாகவும் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

வாக்காளர்கள் சுதந்திரமாக தமது வாக்குகளை அளித்து வருகின்றனர்.

உள்நாட்டு தேர்தல் குறித்து, தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக வெளிநாடுகள் அறிவுரைகளை வழங்கத் தேவையில்லை.

உள்நாட்டு தேர்தல்கள் தொடர்பில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கருத்து வெளியிடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

உள்நாட்டு விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வதிவிடப் பிரதிநிதி அறிக்கை வெளியிட்டது ஆச்சரியமளிக்கிறது.

தேர்தல் ஆணையாளர் ஓர் சுதந்திரமான அதிகாரியாவார்.

சுதந்திரமாகவும், நீதியாகவும், தேர்தலை நடத்துவதற்குரிய அதிகாரங்களை அவர் கொண்டுள்ளார்” என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment