Tuesday, January 6, 2015

கண்டாவளைப் பிரதேசத்தில் மழை வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் உதவி!

 Tuesday, January 06, 2015
இலங்கை::கண்டாவளைப் பிரதேசத்தில் மழை வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள்  அத்தியாவசியப் பொருட்களும் உலருணவுப்பொருட்களும் அடங்கிய பொதிகளை நேற்று வழங்கினார்.

கடந்த சிலவாரங்களாக பெய்த தொடர் மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான மக்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டனர் இவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள் எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து நேற்று அவரால் உலருணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன.

அதனடிப்படையில் அரிசி பருப்பு சீனி வெங்காயம்  தேங்காய் நெஸ்பிறே தேயிலை மஞ்சல் செமன்ரின் பற்பசை பிறஸ் சன்லைட் லைபோய் பனடோல் சித்தாலேப உள்ளிட்ட 16 பொருட்கள் உள்ளடங்கிய பொதிகளை கண்டாவளைப் பிரதேசத்தில் உள்ள கட்டைக்காடு தருமபுரம் ஆகிய பகுதிகளைச்சேர்ந்த சுமார் 150 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

இதேவேளை கண்டாவளைப்பிரதேசத்தில் பாதிப்புக்களை எதிர்கொண்ட ஏனைய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கும் இப்பொதிகளை வழங்குவதற்கு ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்தில் ஏனைய பிரதேசசெயலர்பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கும்  உலருணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய பொதிகளை வழங்குவதற்கும்  அவர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் பிரதேச செயற்பாட்டாளர்களும் இணைந்து மக்களிடம் பொருட்களை கையளித்தனர். 

No comments:

Post a Comment