Tuesday, January 06, 2015
இலங்கை::தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள அதிகார கட்சியான இலங்கை தமிழரசு கட்சி வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவான முகவர்களாக செயற்படவுள்ளது.
இலங்கை::தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள அதிகார கட்சியான இலங்கை தமிழரசு கட்சி வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவான முகவர்களாக செயற்படவுள்ளது.
ஏற்கனவே தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் நியமன பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன் ஆகியோர் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் தலைவர்களை யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் சந்தித்துள்ளனர்.
அவர்கள் மத்தியில் பேசிய மாவை சேனாதிராஜா தாம் ஜக்கிய தேசிய கட்சியின் கீழான பதிவுடைய கிளைகளை தேர்தல் திணைக்களத்துடன் இணைந்து ஒவ்வொரு தேர்தல் தொகுதி வாரியாக பதிவு செய்துள்ளதாகவும் தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிரணி வேட்பாளர் மைத்திரி பால சார்பான தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் (11, கிளிநொச்சி உள்ளடங்கலாக) முகவர்களாக செயற்படுமாறும் அதே போன்று ஒவ்வொரு தேர்தல் தொகுதியில் இருந்தும் பத்துப் பெயர்களை வாக்கெண்ணும் முகவராக பதிவு செய்ய தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேவேளை பிரதேச சபைகளின் பிரதிநிதிகள் தமக்கான நிதி வழங்கப்பட வேண்டும் என கோரியுள்ளனர். இது தொடர்பில் கட்சியின் தலைவரும் நியமன உறுப்பினர் எம்.எ சுமந்திரனும் கருத்திலெடுப்பதாக கூறியதுடன் மைத்திரி பால சிறிசேனவுடன் இணைந்திருக்கும் போது பணம் என்பது ஒரு பிரச்சனையல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று பெயர் குறிப்பிட விரும்பாத சிலரின் ஆதரங்களின் படி தமிழரசுக்கட்சி கட்சியினர் தமது ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்களை மனம் மாற்றி பணத்திற்காக ஜக்கிய தேசிய கட்சியிடம் விற்றுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment