Monday, January 05, 2015
புதுடெல்லி::இலங்கையில் இரும்பு தொழிற்சாலை ஒன்றின் கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக சென்ற 77 ஒப்பந்த தொழிலாளர்கள் அங்கு ஆலை நிர்வாகத்தால் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவு துறை விசாரணை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர். இன்னும் 2 நாட்களில் நாடு திரும்புவார்கள் என்று இந்திய வெளியுறவு துறை இன்று தகவல் வெளியிட்டது.புதுடெல்லியை மையமாக கொண்ட புல்வால்கா ஸ்டீல் நிறுவனம், இலங்கை தலைநகர் கொழும்புக்கு அருகே இரும்பு தொழிற்சாலை ஒன்றை அமைத்து வருகிறது. தொழிற்சாலையின் கட்டிட மற்றும் இயந்திர நிர்மாண பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக பீகார், உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இலங்கைக்கு பணிபுரிய சென்றனர். இதில் சுமார் 77 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக புல்வால்கா நிறுவனம் சம்பளம் வழங்கவில்லை. அத்துடன், அவர்களது பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை ஆலை நிர்வாகம் பறிமுதல் செய்தது. அந்த 77 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் ஆலை வளாகத்துக்கு உள்ளேயே சிறைவைத்தது.இதுகுறித்து பீகாரை சேர்ந்த 44 வயதான ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் தனது உறவினர்களுக்கு கடந்த வாரம் தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, சிறை பிடிக்கப்பட்ட 77 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் அனுப்பப்பட்டன. இலங்கையில் சிறைபட்டுள்ள 77 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்று இந்திய வெளியுறவு துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். இலங்கையில் உள்ள இந்திய தூதர் மூலம் விசாரணை மேற்கொண்டு, சிறை பிடிக்கப்பட்ட 77 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய வெளியுறவு துறை ஈடுபட்டது. முதல் கட்டமாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.அவர்கள் அனைவரும் இன்னும் 2 நாட்களில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார்கள் என்று இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அக்பருதீன் இன்று காலை டுவிட்டரில் செய்தி வெளியிட்டார்.

No comments:
Post a Comment