Thursday, December 25, 2014
இலங்கை::ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாகவே தற்போதைய எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக சதித் திட்டமொன்றை தீட்டியிருந்தார் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மைத்திரிபாலவின் நடவடிக்கைகள் குறித்து தமக்கு எப்போதுமே சந்தேகம் நிலவியதாகத் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவும் மைத்திரிபால சிறிசேன முயற்சித்தார் என அவர் தெரிவித்துள்ளார்.
2005 மற்றும் 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களில் காணப்பட்ட வலுவான தன்மைகூட தற்போதைய எதிர்க்கட்சிக்கு கிடையாது எனவும், மைத்திரிபாலவிற்கான அதரவு வலுவானதாக கருதப்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கட்சிக்கே ஆதரவளிக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment