Friday, December 05, 2014
இலங்கை::இனவாதிகளென எம்மை விமர்சிக்கும் எதிரணியினர் இன்று சிறுபான்மை மக்களுக்கு எதிரான வகையிலேயே தமது ஆட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். ஜாதிக ஹெல உறுமயவினரை பொது எதிரணியில் இணைத்திருப்பது சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் எனத் தெரிவித்திருக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச சிறுபான்மை மக்கள் மிகச் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பொது எதிரணியின் தேர்தல் நகர்வுகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் இனவாதத்ததை தூண்டுவதாகவும் சிறுபான்மை மக்களை அடக்கு
முறைக்குள்ளாக்குவதாகவும் எதிரணியினர் தெரிவிக்கின்றனர். ஆனால்
நாட்டில் ஆயுதப் போராட்டமொன்று இடம்பெற்ற போது புலிகளின்
பயங்கரவாதத்தின் பக்கம் வடக்கு மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு
ஆயுதமேந்த வைக்கப்பட்டனர்.
கிழக்கு முஸ்லிம்கள் புலிகளினால் கொல்லப்பட்டனர்.
அவ்வாறானதொரு சூழ்நிலையில் சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்களை
காப்பாற்றியது நாங்கள் தான். ஐக்கிய தேசியக் கட்சி 2004 ஆம் ஆண்டு புலிகளுடன் ஒப்பந்தத்தினை மேற்கொண்ட போது நாடு சீரழியும்
அபாயம் நிலவியது. அவ்வாறானதொரு நிலையில் புலிகளுடன் போராடி நாட்டை
மீட்டெடுத்தது நாங்களே.
ஆனால் இன்று எம்மை இனவாதிகளாக சித்தரித்து மக்களை எமக்கு எதிராக
திசை திருப்புகின்றனர். இன்று பொது எதிரணியினர் தமது இனவாதக்
கொள்கையில் அவர்களின் செயற்பாடுகளை முன்வைக்கின்றனர். சிறுபான்மை
சமூகம் பொது எதிரணியினரை நம்பி அவர்களுக்கு ஆதரவினை வழங்கத்
தயாராகின்றது. ஆனால் ஜாதிக ஹெல உறுமய எனும் இனவாதக் கட்சி இன்று
அக்கூட்டணியுடன் செயற்பட்டு வருகின்றது.
என்பதை சிறுபான்மை மக்கள் மறந்து விட வேண்டாம். பௌத்த சிங்கள
கொள்கையினை அடிப்படையாக வைத்து அவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
இவர்களை நம்பி சிறுபான்மை மக்கள் பொது எதிரணியினருக்கு
வாக்களிப்பது அச்சுறுத்தலாகவே அமையும்.
எனவே தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் மிகத் தெளிவான சரியான முடிவினை
எடுத்து தமது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் எதிர்காலம்
கேள்விக்குறியாகவே அமையும் எனவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment