Friday, December 05, 2014
கனடா - பிரிட்டிஷ் கொலம்பியா கம்லூப்ஸ் பகுதியில் வழக்கமான போக்குவரத்து சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி புதன்கிழமை காலை சுடப்பட்டதால் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிகாலை 2.45-மணியளவில் அதிகாரி ஒரு காரை நிறுத்த முயன்ற போது இடம்பெற்ற ‘ஒரு துப்பாக்கிபிரயோக பரிமாற்றத்தின்’ போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாக சத்திரசிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதிகாரியின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. புலன்விசாரனை இடம்பெறுகின்றது.
அதிகாரியின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. புலன்விசாரனை இடம்பெறுகின்றது.
பிரிட்டிஷ் கொலம்பிய லைசென்ஸ் தகட்டுடன் கூடிய வெள்ளை நிற 1998 நான்கு-கதவு கிறைஸ்லர் இன்றபிட் வாகனத்தில் வந்த நபர் சந்தேகத்திற்குரியவர் என கூறப்பட்டுள்ளது.
வாகனத்தில் சாரதியுடன் இருவர் இருந்துள்ளனர். இவர்கள் ஆயதம் வைத்திருந்தனர் எனவும் ஆபத்தானவர்கள் எனவும் கருதப்படுகின்றனர்.

No comments:
Post a Comment