Thursday, December 4, 2014

அணு ஆயுத ஒழிப்புக்கு எதிர்ப்பு: ஐ.நா.,வில் நடந்த ஓட்டெடுப்பில் இந்தியா!

Thursday, December 04, 2014
நியூயார்க்: தாமாகவே முன்வந்து அணு ஆயுதங்களை ஒழிக்கும் ஐ.நா., தீர்மானத்திற்கு எதிராக, இந்தியா ஓட்டளித்துள்ளது. இருந்த போதிலும், பெரும்பாலான உறுப்பு நாடுகளின் ஆதரவுடன், ஐ.நா பொதுச் சபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இத்தீர்மானத்தில், இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான் ஆகிய நாடுகள், உடனடியாக, நிபந்தனையின்றி, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை ஏற்று, சர்வதேச அணுசக்தி கழகத்தின் கீழ், அனைத்து அணு உலைகளையும் கொண்டு வர வேண்டும் என்ற முக்கிய அம்சம் இடம் பெற்றிருந்தது.
 
சுருங்கச் சொன்னால், இந்த மூன்று நாடுகளும், அனைத்து அணு ஆயுதங்களை அழிப்பதுடன், அவற்றை உற்பத்தி செய்வதையும் நிறுத்த வேண்டும். இந்த தீர்மானத்திற்கு எதிராக, பாக்., இஸ்ரேல் ஆகிய நாடுகளும் ஓட்டளித்தன. பிரான்ஸ், இங்கிலாந்து, பூட்டான் ஆகிய நாடுகள், நடுநிலை வகித்தன. 21 நாடுகளின் பிரதிநிதிகள், ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. இதையடுத்து, 193 உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா., பொதுச் சபையில்,
 
165 உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கி லாந்து ஆகிய ஐந்து நாடுகளின் அணு ஆயுத ஏகாதிபத்தியத்திற்கு வழி வகுக்கும், பாரபட்சமான அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட, இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.

No comments:

Post a Comment