Thursday, December 04, 2014
இலங்கை::புலிகளால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணம் உள்ளிட்ட 80 சிவிலியன்களின் கொலை தொடர்பான இரண்டாம் கட்ட சாட்சி சேகரிப்பு நடவடிக்கைகள் நேற்று ஒட்டிசுட்டான் - நெடுங்கேணி பிரதான வீதியை அண்மித்த சமனன் குளம்காட்டுப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன.
இலங்கை::புலிகளால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணம் உள்ளிட்ட 80 சிவிலியன்களின் கொலை தொடர்பான இரண்டாம் கட்ட சாட்சி சேகரிப்பு நடவடிக்கைகள் நேற்று ஒட்டிசுட்டான் - நெடுங்கேணி பிரதான வீதியை அண்மித்த சமனன் குளம்காட்டுப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன மீ
அல்விஸின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகின.
சமனன்குளம் காட்டில் புலிகளால் 50 வரயிலான சிவிலியன்கள்
சுட்டுக்கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள்
ஆரம்பமாகின.
எல்பா - 2, எல்பா - 5 சிறைக்கூடங்களிலிலிருந்த சிவிலியன்களே இவ்வாறு
கொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை சமனன்குளம் காட்டுப் பகுதிக்கு லொறியில்
அழைத்துச் சென்ற சாரதி கைதாகியுள்ள நிலையில் அவரின் அடையாள காண்பிப்புக்கு
அமைவாக தடய சேகரிப்பு அகழ்வு பணிகள் நேற்று இடம்பெற்றன.
பெரிய இத்திமடு காட்டில் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்
பணிகளுக்கு மேலதிகமாகவே அடையாளம் காணப்பட்ட இரண்டாவது இடமான சமனன்குளம்
பகுதியில் பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் போது சமனன்குளம்
காட்டுப் பகுதியில் கூட்டுப் படுகொலை ஒன்று இடம்பெற்று சடலங்கள்
எரிக்கப்பட்டமைக்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன் போது சுமார் 64 மீற்றர் சதுர கி.மீ.கள் பரிசோதனைக்கு
உட்படுத்தப்பட்ட நிலையில் ரீ - 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும்
துப்பாக்கி ரவை ஒன்று மீட்கப்பட்டதுடன் மேலும் 35 இடங்கள் அவ்வாறான
இரும்பிலான தடயங்கள் இருக்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த குற்றம் இடம்பெற்றதாக கூறப்படும் இடத்தில் மரங்கள் பல
வருடங்களுக்கு முன்னர் எரிந்த தடயங்கள் மரங்களில் காணப்பட்ட ஒரு வகையான
ஒட்டுண்ணி வகைகள் குறித்த இடத்துக்கும் காட்டின் ஏனைய பகுதிக்கும் இடையிலான
வித்தியாசங்கள் இதன் போது தாவரவியல் தடயங்களாக பதிவாகின.
இது தொடர்பான விசாரணைகள் தொடரும் நிலையில் சந்தேக நபர்கள் நால்வரும்
சாட்சியாளரும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியுள்ள வாக்கு
மூலத்தில் இவ்வாறான குற்றமொன்று இடம்பெற்றுள்ளதையும் சாட்சியங்கள்
அழிக்கப்பட்டதையும் உறுதி செய்துள்ளனர்.
நேற்றைய விசாரணைகள் தடய சேகரிப்பு மற்றும் ஆய்வுகளில் 20 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இன்று பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணம் கொலை விசாரணைகள் இடம்பெறவுள்ள
நிலையில் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட இரு இடங்களிலும் மண்ணில் டீசல்
கலந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சுட்டுக்கொலை செய்யப்பட்ட பின்னர்
எரிக்கப்பட்ட 80 பேர் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
No comments:
Post a Comment