Thursday, December 4, 2014

நாட்டை பாதுகாத்த தலைவரை சிறைப்படுத்த வெளிநாட்டு சக்திகள் சதி; மைத்திரி, சந்திரிகா துணை!

Thursday, December 04, 2014
இலங்கை::பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இம்முறை ஜனாதிபதி தேர்தல் மிகவும் தீர்மானம் மிக்கது. மக்கள் மதிநுட்பத்துடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
யார் தேர்தலில் தோற்றாலும் அது பௌத்த பிக்குகளை பாதிக்காது. எனினும் நாட்டை பிளவுபடுத்தும் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
 
நாட்டில் நிலவும் அரசியல் குழப்ப நிலைமையைப் பயன்படுத்தி சிலர் தங்களது நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்த முயற்சிக்கின்றனர்.
 
சந்திரிக்கா குமாரதுங்க மைத்திரி என்ற பெயரைப் பயன்படுத்தி அகே வைரய திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை அரங்கேற்ற முயற்சிக்கின்றார். (அகே வைரய என்ற திரைப்படம் வயது வந்தர்வகளுக்கு மட்டுமான ஒர் திரைப்படமாகும். பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர் ஆண்களை பழிவாங்குவதே இந்த திரைப்படத்தின் கதைப் பின்னணியாகும்.
 
நாட்டை பாதுகாத்த தலைவரை சிறைப்படுத்தி வெளிநாட்டு சக்திகளின் தேவகைளை பூர்த்தி செய்ய முயற்சிக்கப்படுகின்றது.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தீர்மானம் அரசியல் ரீதியானது. ஜனாதிபதி தேர்தலை கருத்திற் கொள்ளாது நாடாளுமன்றத் தேர்தலை கருத்திற் கொண்டு தீர்மானம் எடுத்துள்ளது.
 
ராஜபக்ச பற்றி நல்லதோ கெட்டதோ தெரிவிக்கக் கூடிய காலம் இதுவல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment