Thursday, December 25, 2014
இலங்கைக்கு கடன் வழங்கும் ஜெய்க்கா, ஜெபிக், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன அரசியல் பிரதிநிதிகளை எவ்வாறு திருடுவதற்கு அனுமதிக்குமெனவும் அரசாங்க தரப்பு அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகியோர் நேற்று கேள்வியெழுப்பினர்.
நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கான நிதி மதிப்பீட்டினை எச்சந்தர்ப்பத்திலும் அரசியல் வாதிகள் முன்னெடுப்பதில்லையெனக் கூறிய மேற்படி அமைச்சர்கள் இதனை அமைச்சு மட்ட செயலாளர்களும் பல்கலைக்கழக பொறியியலாளர்களுமே முன்னெடுப்பதென்பது எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தெரியாதா? எனவும் அவர்கள் வினவியுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்கள் மேற்கண்ட தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
ஜப்பான் அரசாங்கத்தின் முக்கிய நிறுவனமே ஜய்க்காவாகும். இந்நிறுவனங்கள் இலகு வட்டி அடிப்படையில் எமக்கு கடனுதவி வழங்குகின்றன. இந்நிலையில் நாம் ஒரு வாகனத்தை குறித்த வேலைக்காக அமர்த்துவதானாலும் வேலையாட்களை பெற்றுக்கொள்வதானாலும் அவர்களது அனுமதியை பெற வேண்டியது அவசியம்.
உதாரணமாக வீதி அபிவிருத்தியை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு கிலோ மீற்றர் தூரத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதி முற்று முழுதாக அதன் வேலைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அவர்கள் எச்சமயத்திலும் கண்காணித்த வண்ணமிருப்பார்கள்.
ஜெபிக், ஏடிபி உள்ளிட்ட அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களினதும் செயற்பாடுகள் அவ்வாறேயுள்ளது. குறித்த வேலைக்காக நாம் ஒரு விலையுடன் வாகனத்தை கொள்வனவு செய்யப்போவதாக கூறினால் அதைவிட குறைந்த விலையுடனான வாகனத்தை அவர்கள் எமக்கு சிபாரிசு செய்வார்கள். ஒரு சதத்திற்கு கூட கணக்கு காண்பிக்கப்பட வேண்டிய கட்டத்தில் அரசாங்கம் இருக்குகையில் அதில் இரண்டு பங்கை ஜனாதிபதியும் அவரது குடும்பத்தாரும் சொந்த தேவைகளுக்காக பயன்படுத்துவதாக எதிரணி முன்வைத்துள்ள பிரகாரம் அப்பட்டமான பொய்யாகும்.
எமது ஜனாதிபதியவர்கள் நாட்டிற்காக செய்ததைக் கூறி வாக்கு சேகரித்து வரும் நிலையில் மைத்திரிபால சிறிசேன தன்னால் செய்ய முடியாமல் போனதை கூறி வாக்கு தேட முயற்சிப்பது அவரது இயலாமையை வெளிக்காட்டுகிறது. ஜனாதிபதியவர்கள் நினைத்திருந்தால் புலிப்பயங்கரவாதிகளை அழிக்காமல் சர்வதேசத்திடம் பணம் பெற்று பிழைப்பு நடத்தியிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லையென்றும் தெரிவித்தார். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கூறுகையில்,
எந்த நாட்டிலாவது அபிவிருத்திக்குத் தேவையான நிதி மதிப்பீட்டினை அரசியல் தலைவர்கள் முன்னெடுக்கமாட்டார்களென்பது மைத்திரிபாலவிற்கு தெரியாமல் போயுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் தோல்வியை முன்கூட்டியே அறிந்து வைத்துள்ள மைத்திரிபால அதை தாங்கிக்கொள்ள முடியாமலேயே ஜனாதிபதிக்கு சேறுபூசும் வகையில் பொய் பிரசாரம் செய்து வருகின்றார்.
சிறிசேன குடும்பமே ஊழல் நிறைந்தது. அவரது சகோதரர்களே பொலன்னறுவையில் கல், மண், நெல் மாபீயா நடத்தி வந்தார்களே தவிர ராஜபக்ஷவின் சகோதரர்கள் அல்லர்.மைத்திரிபாலவிடம் திறமையில்லை. அவருக்கு ஆடை அணியவும், கை காட்டவும், நடக்கவும் பேசவும் வெள்ளையர்கள் விசேட வகுப்புகள் எடுக்கின்றனர். நாட்டை ஆட்சி செய்பவருக்குரிய எந்தவொரு ஆளுமையும் இவரிடம் இல்லை. இவரை நம்பி எப்படி நாட்டைக் கொடுப்பது.
இவரினால் நாட்டை முன்னேற்ற முடியுமா? ஆனால் மஹிந்த ராஜபக்ஷ இயல்பாகவே நாட்டுத் தலைவருக்குரிய ஆளுமையைக் கொண்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் இதேபோன்று தான் பலர் சரத் பொன்சேகாவிற்காக பேசினார்கள். இறுதியில் எமது ஜனாதிபதியவர்களே வென்றார். அதேபோன்று இம்முறையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெல்வது உறுதி எனவும் அவர் கூறினார்.
இலங்கை::அபிவிருத்தியென்னும் போர்வையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தாரும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக எதிரணியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டினை அரசாங்கம் முழுமையாக மறுத்துள்ளது.
இலங்கைக்கு கடன் வழங்கும் ஜெய்க்கா, ஜெபிக், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன அரசியல் பிரதிநிதிகளை எவ்வாறு திருடுவதற்கு அனுமதிக்குமெனவும் அரசாங்க தரப்பு அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகியோர் நேற்று கேள்வியெழுப்பினர்.
நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கான நிதி மதிப்பீட்டினை எச்சந்தர்ப்பத்திலும் அரசியல் வாதிகள் முன்னெடுப்பதில்லையெனக் கூறிய மேற்படி அமைச்சர்கள் இதனை அமைச்சு மட்ட செயலாளர்களும் பல்கலைக்கழக பொறியியலாளர்களுமே முன்னெடுப்பதென்பது எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தெரியாதா? எனவும் அவர்கள் வினவியுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்கள் மேற்கண்ட தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்ததாவது,
ஜப்பான் அரசாங்கத்தின் முக்கிய நிறுவனமே ஜய்க்காவாகும். இந்நிறுவனங்கள் இலகு வட்டி அடிப்படையில் எமக்கு கடனுதவி வழங்குகின்றன. இந்நிலையில் நாம் ஒரு வாகனத்தை குறித்த வேலைக்காக அமர்த்துவதானாலும் வேலையாட்களை பெற்றுக்கொள்வதானாலும் அவர்களது அனுமதியை பெற வேண்டியது அவசியம்.
உதாரணமாக வீதி அபிவிருத்தியை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு கிலோ மீற்றர் தூரத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதி முற்று முழுதாக அதன் வேலைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அவர்கள் எச்சமயத்திலும் கண்காணித்த வண்ணமிருப்பார்கள்.
ஜெபிக், ஏடிபி உள்ளிட்ட அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களினதும் செயற்பாடுகள் அவ்வாறேயுள்ளது. குறித்த வேலைக்காக நாம் ஒரு விலையுடன் வாகனத்தை கொள்வனவு செய்யப்போவதாக கூறினால் அதைவிட குறைந்த விலையுடனான வாகனத்தை அவர்கள் எமக்கு சிபாரிசு செய்வார்கள். ஒரு சதத்திற்கு கூட கணக்கு காண்பிக்கப்பட வேண்டிய கட்டத்தில் அரசாங்கம் இருக்குகையில் அதில் இரண்டு பங்கை ஜனாதிபதியும் அவரது குடும்பத்தாரும் சொந்த தேவைகளுக்காக பயன்படுத்துவதாக எதிரணி முன்வைத்துள்ள பிரகாரம் அப்பட்டமான பொய்யாகும்.
எமது ஜனாதிபதியவர்கள் நாட்டிற்காக செய்ததைக் கூறி வாக்கு சேகரித்து வரும் நிலையில் மைத்திரிபால சிறிசேன தன்னால் செய்ய முடியாமல் போனதை கூறி வாக்கு தேட முயற்சிப்பது அவரது இயலாமையை வெளிக்காட்டுகிறது. ஜனாதிபதியவர்கள் நினைத்திருந்தால் புலிப்பயங்கரவாதிகளை அழிக்காமல் சர்வதேசத்திடம் பணம் பெற்று பிழைப்பு நடத்தியிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லையென்றும் தெரிவித்தார். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கூறுகையில்,
எந்த நாட்டிலாவது அபிவிருத்திக்குத் தேவையான நிதி மதிப்பீட்டினை அரசியல் தலைவர்கள் முன்னெடுக்கமாட்டார்களென்பது மைத்திரிபாலவிற்கு தெரியாமல் போயுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் தோல்வியை முன்கூட்டியே அறிந்து வைத்துள்ள மைத்திரிபால அதை தாங்கிக்கொள்ள முடியாமலேயே ஜனாதிபதிக்கு சேறுபூசும் வகையில் பொய் பிரசாரம் செய்து வருகின்றார்.
சிறிசேன குடும்பமே ஊழல் நிறைந்தது. அவரது சகோதரர்களே பொலன்னறுவையில் கல், மண், நெல் மாபீயா நடத்தி வந்தார்களே தவிர ராஜபக்ஷவின் சகோதரர்கள் அல்லர்.மைத்திரிபாலவிடம் திறமையில்லை. அவருக்கு ஆடை அணியவும், கை காட்டவும், நடக்கவும் பேசவும் வெள்ளையர்கள் விசேட வகுப்புகள் எடுக்கின்றனர். நாட்டை ஆட்சி செய்பவருக்குரிய எந்தவொரு ஆளுமையும் இவரிடம் இல்லை. இவரை நம்பி எப்படி நாட்டைக் கொடுப்பது.
இவரினால் நாட்டை முன்னேற்ற முடியுமா? ஆனால் மஹிந்த ராஜபக்ஷ இயல்பாகவே நாட்டுத் தலைவருக்குரிய ஆளுமையைக் கொண்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் இதேபோன்று தான் பலர் சரத் பொன்சேகாவிற்காக பேசினார்கள். இறுதியில் எமது ஜனாதிபதியவர்களே வென்றார். அதேபோன்று இம்முறையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெல்வது உறுதி எனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment