Thursday, December 25, 2014

நாகை திரும்பிய 66 மீனவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்!


Thursday, December 25, 2014
சென்னை - கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் சிறை வைக்கப்பட்டிருந்த 66 மீனவர்கள் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பி  வந்தனர்.
 
அவர்களை  மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், கலெக்டர் து.முனுசாமி ஆகியோர் நேற்று
முன்தினம்   இரவு காரைக்கால் மார்க் துறைமுகத்தில் வரவேற்றனர். மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவிற்கிணங்க உணவு மற்றும் புதிய உடைகள் வழங்கி அரசின் செலவிலேயே சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்கள்.
 
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.ஜெயபால்  தெரிவித்ததாவது:மி
மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீனவர்களின் நலன் காப்பதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். இதில் குறிப்பாக மீன்பிடித் தடைக்காலங்களில் மீனவர்களுக்கு உதவித்தொகை, மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டு தனி முக்கியத்துவம், மீனவ குழந்தைகளள் தங்களது தொழிலேயே உயர் கல்வி பெற வேண்டும் என்பதற்காக மீன்வளப் பல்கலைக் கழகம் என பல்வேறு சிறப்புத் திட்டங்களை எல்லாம் செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் அண்டை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், சிறை பிடிக்கப்படும் மீனவ குடும்பங்களுக்கு சிறையில் வாடும் காலங்களில் நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் நிதி வழங்கி வருகிறார்.
 
கடந்த செப்டம்பர் 30ந் தேதி அன்று நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேலு என்பவருக்கு சொந்தமான படகில் காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற வெள்ளக்கோவில், பெருமாள்பேட்டை, குண்டியாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த 7 மீனவர்களும்  புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த நைனா முகம்மது, முகம்மது மரைக்காயர், ஜெயினுல் ஆபூதீன் ஆகியோருக்கு சொந்தமான படகில் கோட்டைப் பட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கோட்டைப் பட்டினத்தைச் சேர்ந்த 9 மீனவர்களும், கடந்த நவம்பர் 23ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த காளிமுத்து, ராஜேந்திரன் ஆகியோருக்கு சொந்தமான படகில், ஜெகதாப்பட்டினத்திலிருந்து
 
புதுக்கோட்டை மாவட்டம், அய்யம்பட்டினம், செல்லனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 5 மீனவர்களும்  நாகை மாவட்டம், தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை மற்றும் புதுப்பேட்டையைச் சேர்ந்த 5 மீனவர்களும், ராமேஸ்வரம் லஷ்மண தீர்த்தம் கிராமத்தைச் சேர்ந்த முனியராஜ், தம்பியான் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த கற்புக்கரசி, நம்புசேகரன், தனுகோடி ஆகியோருக்கு சொந்தமான படகில் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும்  இம்மாதம் 9ந் தேதி அன்று காரைக்கால் கோட்டுச்சேரி மேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜூ, கலியபெருமாள், சுபாஷ் சந்திரன், உலகநாதன்  ஆகியோருக்கு சொந்தமான படகில் காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற அக்கரைப்பேட்டை, சந்திரபாடி, சின்னங்குடி, நம்பியார் நகர், தரங்கம்பாடி, புதுப்பேட்டை, கீச்சாங்குப்பம், சாமந்தான்பேட்டை ஆகிய கிராமத்தைச் சேர்ந்த 14 மீனவர்களும்  கடந்த 9ந் தேதி நாகை அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன், சதீஷ், ஆகியோருக்கு சொந்தமான படகில் அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த 14 மீனவர்களும் என 66 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் இருந்த மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மக்களின் முதல்வர் ஜெயலலிதா போர்க்கால அடிப்படையில் முயற்சி மேற்கொண்டதன் பயனாக 66
மீனவர்களையும் இலங்கை அரசாங்கம் விடுவித்தது.
 
விடுதலை செய்யப்பட்ட நாகை, ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படையினரிடம் இந்திய கடல் எல்லையில் நேற்று மாலை 5.20 மணிக்கு இந்திய கப்பல்படை டிஐஜி சசிகுமாரிடம் ஒப்படைத்தனர். 66 மீனவர்களும் நேற்றுமுன்தினம்   இரவு 9.30 மணிக்கு மார்க் துறைமுகம் வந்தடைந்தனர். இவர்கள் அனைவரும் அரசின் செலவிலேயே அவர்களது சொந்த ஊரக்கு தனித்தனி
வாகனங்களில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
இப்படி மீனவர்களின் வாழ்வில் எந்த ஒரு இன்னலாக இருந்தாலும் உடனடியாக நிவர்த்தி செய்து வரும்
 மக்களின் முதல்வருக்கு ஒட்டுமொத்த மீனவ சமுதாயத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.
 
இந்திய கப்பல்படை டிஐஜி சசிகுமார் 66 மீனவர்களையும் கலெக்டர் து.முனுசாமி முன்னிலையில் நாகை, புதுக்கோட்டை, ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தார்.
மார்க் துறைமுகம் வந்தடைந்த 66 மீனவர்கள் தெரிவிக்கையில், இலங்கை சிறையில் நாங்கள் நீண்ட காலம் வாட நேரிடும் என்று நினைத்திருந்தோம். நாங்கள் இவ்வளவு விரைவாக விடுவிப்போம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. எங்களை மிக விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுத்த மக்களின் முதல்வர் ஜெயலலிதவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கண்ணீர் மல்கக்  கூறினார்கள்.
 
இந்நகிழ்ச்சியில் மீன்வளத்துறை இணை இயக்குனர் சுப்புராஜ், துணை இயக்குனர் ஷர்மிளா, உதவி இயக்குனர்கள் சிவகுமார், சேகர், துணை இயக்குனர் காசிநாதப்  பாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கே.அண்ணாதுரை, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ பஞ்சாயத்தார்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

No comments:

Post a Comment