Tuesday, December 02, 2014
இலங்கை::எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் உட்பட அந்த அணியினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தண்டனை வழங்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த முன்ணியின் பேச்சாளரான மொஹமட் முஸ்ஸாமில் இதனை கூறியுள்ளார்.
எதிரணியினரின் இந்த சவாலை தோற்கடிக்க சகல இலங்கையரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இனவாதம் மீண்டும் தலைத்தூக்க இடமளிப்பதன் மூலம் நாட்டை மேற்குலக காலனித்துவ நாடாக மாற்ற சில சக்திகள் முயற்சித்து வருகின்றன.
இந்த சக்திகளை தோற்கடிக்கவும் தேசிய சக்திகளை இரண்டாக பிளவுப்படுத்த எதிர்க்கட்சி மேற்கொண்டு வரும் சதித்திட்டத்தை தோற்கடிக்கவும் தேசப்பற்றாளர்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் முஸ்ஸாமில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment