Saturday, December 27, 2014

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் அரசில் இணைவு: சரத் பொன்சேக்காவின் சகாக்கள் 09 பேர் அரசோடு இணைவு!

Saturday, December 27, 2014
இலங்கை::சரத் பொன்சேக்காவின் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் 09 பேர் இன்று ஆளுந்தரப்போடு இணைந்து கொண்டுள்ளனர்.
 
மேல் மாகாண சபை உறுப்பினர் ராஜித கபு ஆரச்சி உட்பட்ட மினுவங்கொடை, கம்பஹா, நீர்கொழும்பு, திவுலப்பிட்டிய, பியகம, வத்தளை, மீரிகம, அத்தனகல்லை ஆகிய பிரதேசங்களின் இணை அமைப்பாளர்களே இவ்வாறு ஜ்னாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு ஆளுந்தரப்போடு இணைந்துள்ளனர்...
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உட்பட கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் அறுவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
 
கதிரேசு தபாஹரன், பாக்கியநாதன் பார்த்தீபன், ராமய்யா ராஜசேகரம் ஆகிய பிரதேச சபை உறுப்பினர்களும் கூட்டமைப்பின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான யோகநந்தன் ராஜா மற்றும் அமைப்பாளர்களான பாலசந்திரன் சஜீவன், ராகவன் சந்திரஹாசன் ஆகியோரே தாம் பொது வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக கூறினர்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு இவர்கள் தமது ஆதரவினை ஜனாதிபதிக்கு வழங்குவதாக உறுதிபடுத்தினர்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி யின் வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினரான லட்சுமணன் அருட்பிரசாத் என்பவரும் ஜனாதிபதிக்கே தனது ஆதரவினை வழங்குவதாக தெரிவித்தார்.
 
இவர்கள் கருத்து தெரிவிக்கையில், வவுனியா ஆசிக்குளம் சிதம்பரபுரம் மக்கள் கடந்த 20 வருடங்களாக அகதி முகாம்களில் வாழ்கின்றனர். மழை வந்தால் ஒழுகும் ஓலைக் குடிசைகளில் வாழும் மக்களுக்கு நிரந்தர வீடுகள் தேவை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இனப்பிரச்சினைக் குறித்து மட்டுமே பேசுகின்றனர் தவிர அபிவிருத்திக் குறித்து அலட்டிக்கொள்வதில்லை. இனப்பிரச்சி னையை விட அபிவிருத்தி எமக்கு அவ சரமாக தேவைப்படுகிறது. எனவே தான், நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் களை ஆதரிக்க முடிவு செய்தோம் என்றனர்.
 
மேலும் ஜனநாயக கட்சியின் கம்பஹா மாவட்ட பிரதேச சபை உறுப்பினர் ரஜித்த ஹப்புவாரச்சி உள்ளிட்ட சுமார் 10 அமைப்பாளர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதனை உறுதி செய்தனர்.
 
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற் காகவே நாம் ஜனநாயகக் கட்சியை ஆதரித்தோம்.

No comments:

Post a Comment