Tuesday, November 4, 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினை வாதத்தை கைவிட வேண்டும்: பிரதமர் டி.எம்.ஜயரட்ண!

Tuesday, November 04, 2014
இலங்கை::நாட்டை திறம்பட நிருவகிக்க நிறைவேற்று அதிகாரம் இருக்க வேண்டும்நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையே எமது நாட்டுக்குத் தேவையானது. என பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்தார்.
 
ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் நிதி ஒதுக்கீட்டுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்.
 
தேர்தல் கடமைகளில் பொலிஸாரை ஈடுபடுத்துவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் விரும்பவில்லையா? அல்லது தேர்தலுக்கு முன்னர் பொலிஸாருக்கு ஒருவாரம் லீவு கொடுக்க வேண்டும் என்றா எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார். இவ்வாறு பொலிஸார் தேவையில்லை யென்றால் எதிர்க்கட்சித் தலைவர் அதற்கான ஆலோசனையை முன்வைக்கப் பட்டும் நாட்டில் 2 கோடி பேர் வாழ்கின்றனர்.
 
இவர்களில் 98 இலடசம்பேர் வாக்காளர்களாக உள்ளனர். இந்த வாக்களிப்பின் போது அதனைச் சமாளிக்கக் கூடிய திறன் பொலிஸாருக்கே உள்ளது. அதனால் தான் பொலிஸாரை தேர்தல் ஆணையாளர் பயன்படுத்துகிறார்.
 
நிறைவேற்று அதிகாரம் வேண்டாம் என்று சொல்பவர்கள் கூட இன்று இந்த அதிகாரத்துக்குப் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெளத்த தர்மத்தில் கூறப்பட்டிருப்பதன் படி அதிகாரத்தைவிட்டு துறவறம் பூண்டு சென்றுதான் முக்தி பெற வேண்டும். கெளத்தம புத்தரும் தனது அதிகாரத்தைக் கைவிட்டு துறவறம் பூண்டு முக்திபெற்றவர்தான்.
ஆனால் இங்கே சிலர் அதிகாரத்தைப் பெற்று அதனூடாக முக்திபெற முயற்சிக்கிறார்கள். இந்த நடவடிக்கை காவியுடை தரித்த பெளத்த தர்மத்துக்கே இழுக்காக இருக்கிறது.
1
978ஆம் ஆண்டு முதல் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறை இந்த நாட்டில் அமுலிம் இருக்கிறது. நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. நியாயமானதொரு நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டு செல்வதற்கு இந்த அதிகாரம் மிகவும் தேவையானது.
 
இன்று நாட்டில் நீதியும் நேர்மையுமான தேர்தல் நடைபெறுகிறது. பெரும்பான் மையான வாக்குகளால்தான் ஜனாதிபதி என்பவர் பதவியேற்கிறார். நிறைவேற்று அதிகாரத்தை நாங்கள் விரும்பவில்லை என்றால் மக்கள் அதற்கு எதிராக வாக்களிக்க முடியும். ஆனால் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியை விரும்பியதால்தான் மக்கள் அவருக்கு வாக்களிக்கிறார்கள். இனவாதம் எங்களிடம் இல்லை. சகல இனத்தையும் சமமாகப் பார்ப்பதே ஜனாதிபதியின் கொள்கையாகும்.
 
இன்று குடிசைகளில் இருந்தவர்கள் மாடி வீடுகளில் குடியிருக்கிறார்கள். வீதிக் கட்டமைப்புக்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. சிறுவர் முதல் முதியவர்வரை நன்மை பெறக்கூடியவகையில் திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன. அடுத்தவரின் அடிவருடிகளாக ஜனாதிபதி இருக்கவில்லை.
 
அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் இவரையே மக்கள் மீண்டும் தெரிவு செய்வார்கள். நியாயமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும். சிலர் ஜனாதிபதியை சீண்டிப்பார்க்கிறார்கள். ஆனால் அவர் எதற்கும் சளைத்தவர் அல்ல. ஒரு ஜாம்பவானாக ஜனாதிபதி வலம்வருகிறார் தலையிருக்க வாலை மட்டும் அசைத்துப் பார்க்கிறார்கள். 2022ஆம் ஆண்டுவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இந்த நாட்டை ஆட்சிசெய்வார்.
 
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினை வாதத்தை கைவிட வேண்டும்பிரிவு என்பது அழிவுதான். பலஸ்தீனம் இஸ்ரேல் இன்று இரண்டாகப் பிரிந்துகொண்டு தினமும் அழிவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. நாம் ஒருவரும் நிரந்தரமாக வாழப்போகிறவர்கள் அல்ல. இங்கு இருக்கின்ற 225 பேரும் இன்னும் 10, 15 வருடங்கள் இருக்க மாட்டோம். அனைத்தும் தூரநோக்கோடு பார்க்கப்பட வேண்டும். இன்று வாழ்பவர்களைப் பற்றியல்ல எதிர்கால சந்ததியினரின் எதிர்காலம் குறித்தே நாம் செயற்பட வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் என்றார்.

No comments:

Post a Comment