Tuesday, November 4, 2014

தற்போதைய நாடாளுமன்றத்தின் காலம் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நீடிக்கப்படமாட்டாது: அரசாங்கம்!

Tuesday, November 04, 2014
இலங்கை::தற்போதைய நாடாளுமன்றத்தின் காலம் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நீடிக்கப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ அவ்வாறான செயற்பாடு ஒன்று தொடர்பில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஏற்கனவே அமைச்சர் ஒருவர் இந்த சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் வெளியிட்ட கருத்து தொடர்பாக தெளிவாக்கிய அமைச்சர் அது அவரின் சொந்தக்கருத்து என்றும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment