Saturday, November 1, 2014

மத்திய தரைக்கடல் வழியாக ஒரு லட்சம் அகதிகள் இத்தாலியில் தஞ்சம்: அரசு திணறல்!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
Saturday, November 01, 2014
ரோம்: மத்திய தரைக் கடல் வழியாக இத்தாலிய கடற்பகுதிக்குள் ஏராளமான மக்கள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அவ்வாறு வந்த ஒரு லட்சம் அகதிகளை இதுவரை உயிருடன் மீட்டிருக்கிறோம். பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது மீட்பு பணிகளை நிறுத்த முடிவு செய்திருக்கிறோம் என்று இத்தாலி அரசு அறிவித்துள்ளது.
 
மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த பலர் வறுமை காரணமாக மத்திய தரைக் கடல் வழியாக படகுகளில் இத்தாலிய கடற்பகுதிக்குள் வருகின்றனர். அவ்வாறு அவர்கள் வரும்போது கடலில் விபத்து ஏற்பட்டு பலியாகி உள்ளனர்.இத்தாலிய கடற்பகுதிக்குள் கடற்படையினரின் ரோந்து பணியின்போது, கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமான அகதிகளை இதுவரை மீட்டிருக்கிறோம். இத்தாலிய நாட்டில் கடந்த 3 ஆண்டாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பொது நிதி நெருக்கடி காரணமாக, எங்கள் கடற்பகுதியில் மீட்பு பணிகளை நிறுத்த முடிவு செய்துள்ளோம் என்று எகிப்திய உள்துறை அமைச்சர் ஏஞ்சலினோ அல்பானோ நேற்றிரவு ரோம் நகரில் கூறினார்.
 
இத்தாலிய கடற்பகுதியில் படகுகள் மூலம் அத்துமீறி நுழைந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 360 பேர் சிசிலியன் தீவில் இருக்கும் லாம்பிடுசா நகரில் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை மற்றும் இருப்பிடங்களை அளிப்பதற்கு லட்சக்கணக்கில் பணம் செலவாகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக, கடற்பகுதியில் தற்காலிகமாக மீட்பு பணிகளை நிறுத்தியுள்ளோம் என்றும் ஏஞ்சலினோ அல்பானோ கூறினார்.சிசிலி மற்றும் வடக்கு ஆப்ரிக்க கடல் எல்லை வரை 5 போர்க் கபபல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன என்று இத்தாலிய ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.மத்திய தரைக் கடல் பகுதியில் படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 3,300 அகதிகள் பலியாகி உள்ளனர் என்று ஐ.நா. மீட்பு பணி குழு தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment