Wednesday, November 26, 2014

கல்முனை மாநகர சபையில் உறுப்பினர்களிடேயே மோதல்: மு.கா.உறுப்பினர் கதிரையால் தாக்கப்பட்டு காயம்!

Wednesday, November 26, 2014
இலங்கை::நேற்று  இடம்பெற்ற கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வின் போது உறுப்பினர்களிடேயே ஏற்பட்ட கை கலப்பின் போது ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 
கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று  செவ்வாய்க்கிழமை (2014-11-25) மாலை மாநகர முதல்வர் சட்டமுதுமானி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது.
 
இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் ஏ.எம். றியாஸ் பிரரேணை ஒன்றை சபையில் சமர்பிக்க முற்பட்ட போது அப்பிரேரணை  நிகழ்ச்சி நிரலில் இல்லாததனால் அதனை அடுத்த அமர்வில் சமர்ப்பிக்குமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார்.
 
இதனைத் தொடர்ந்து உறுப்பினர் றியாஸ் முதல்வருடன் வாய்த் தர்க்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மு 
ஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலருக்கும் உறுப்பினர் றியாசுக்கும் இடையில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டு சபை அல்லோலகல்லப்பட்டதால் முதல்வர் சபையை ஒத்தி வைத்து விட்டு வெளியேறிச் சென்றார்.
 
எனினும் வாக்குவாதம் முற்றி ஏற்பட்ட கைகலப்பின் போது முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.ரம்.பிர்தௌஸ் கதிரை ஒன்றினால் தாக்கப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment