Wednesday, November 26, 2014

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தல்: 71 சதவிகித வாக்குகள் பதிவு!

Wednesday, November 26, 2014
ஜம்மு-காஷ்மீர்  மாநில சட்டமன்ற முதல் கட்டத் தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடை பெற்றது. இதில் 71% வாக்குகள் பதிவாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்திற்கான   முதற்கட்ட வாக்குப்பதிவு  நேற்று காலை தொடங்கியது. கார்கில், லடாக் உள்பட 7 மாவட்டங்களில் உள்ள 15 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
 
இந்தத்  தேர்தலில், ஆளும் தேசிய மாநாட்டு கட்சி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. இங்கு, 787 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம்  123 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 10 லட்சத்து 51 ஆயிரத்து 642 வாக்காளர்கள் வாக்களித்தனர்.
 
இதேபோல், ஜார்க்கண்ட் சட்டசபையில் மொத்தம் உள்ள 81 இடங்களில் 15 தொகுதிகளுக்கான இன்றைய முதல்கட்ட தேர்தலில் 61.92 சதவீதம் வாக்குகள் பதிவானதாக ஜார்க்கண்ட் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment