Monday, November 03, 2014
இலங்கை::இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கென 7 வாகனங்கள் இம் மாத இறுதிக்குள் வடக்கிற்கு கொண்டுவரப்படும் என தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை::இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கென 7 வாகனங்கள் இம் மாத இறுதிக்குள் வடக்கிற்கு கொண்டுவரப்படும் என தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாண சபை கடந்த வருடம் அமைக்கப்பட்ட பின்னர் மாகாண சபையின் 38 உறுப்பினர்களுக்கும் இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்பாக இந்திய தயாரிப்பு வாகனங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்திய அரசாங்கம் இந்த வாகனங்களுக்கான கொள்வனவு விலைப் பெறுமதியை வழங்கச் சம்மதித்து இறக்குமதி வரிப் பணத்தை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரியிருந்தது.
இந்த நிலையில் தற்பொழுது இந்திய அரசாங்கம் இறக்குமதி வரிப்பணத்தை தாமே தானே செலுத்தி முதற்கட்டமாக 7 வாகனங்களை வடக்கிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக கொழும்பிலுள்ள 7 வாகன இறக்குமதி நிறுவனங்களிடமிருந்து கூறுவிலை கோரப்பட்டு குறைவான பெறுமதியைக் கோரிய நிறுவனத்திடம் வாகன இறக்குமதிக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment