Tuesday, November 25, 2014

சர்வதேச சக்திகளின் எடுப்பார் கைப்பிள்ளையாக மாற்றப்பட்ட: மைத்திரிபால சிறிசேன!

Tuesday, November 25, 2014
இலங்கை::சுதந்திரக்கட்சியில் இருந்த மைத்திரிபால சிறிசேன இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கவை பிரத மராக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தான் பதவியேற்றால் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
 
இது மைத்திரிபால சிறிசேனவின் சொந்த மூளையாகத் தெரிய வில்லை. மேற்குலக நாடுகளின் பின்னணியோடு சந்திரிகா பண் டாரநாயக்க குமாரதுங்கவும், ரணில் விக்கிரம சிங்கவும் இவரை ஆட்டுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
 
நாட்டில் அபிவிருத்தி முன்னெடுப்புக்களில் எவ்வித குறைபாடு களும் இல்லை. தெற்காசியாவிலேயே பாரிய பொருளாதார அபிவிருத்தியைக் கண்டுவரும் நாடு என உலக வங்கி பாராட்டுத் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்ல, சகல இன மக்களும் நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வரும் நிலையில், நாட்டை முடக்கி ஸ்திரமற்ற நிலைக்குக் கொண்டு செல்லும் சர்வதேச சக்தியின் சதி முயற்சிக்கு மைத்திரிபால சிறிசேன பகடைக்காயாக பயன்படுத்தப்படுகிறார் என்பதே உண்மை.
 
ரணில் விக்கிரமசிங்க சந்திரிகா குமாரதுங்க உட்பட எதிரணி முக்கியஸ்தர்கள் சிலர், கொழும்பிலுள்ள மேற்கு நாடுகளின் தூதரகங்களுடன் உடன்படிக்கை செய்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதற்கமைய நாட்டில் பொம்மை ஆட்சியொன்றை ஏற்படுத்தி தங்களது செல்லப்பிள்ளையான ரணிலை பிரதமராக்குவதுதான் இவர்களது சூழ்ச்சியாகும்.
 
மைத்திரிபால சிறிசேனவுக்கு நாட்டு மக்களில் அக்கறை இருந்தி ருந்தால் கட்சிக்குள்ளேயே தனது பிரச்சினையைப் பேசித்தீர்வு கண்டிருக்கலாம். அல்லது அமைச்சரவையில் பேசி தனது சங்கடங்களைப் போக்கியிருக்கலாம். ஸ்ரீல.சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவியான பொதுச் செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து வந்தவர் மைத்திரி. அதேநேரம், அவர் இதுவரை வகித்து வந்த அமைச்சுப் பொறுப்புக்களும் மிகவும் முக்கிய மானவை. அப்படியிருந்தும் பிரச்சினைகள் இருந்ததாக அவர் வெளிப்படுத்திக்கொள்ளவே இல்லை. கட்சி மாறுவதற்கு முதல் நாள் இரவு கூட அலரிமாளிகையில் உணவு உண்டு சுவாரஷ்யமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
 
தேர்தல் நடத்துவதற்கான பிரகடனத்தில் ஜனாதிபதி கையெழுத் திட்ட பின்னர், தனக்குப் பிரச்சினை இருக்கிறதெனக் கூறி, அவர் வெளியேறி இருப்பது அவருடைய காட்டிக்கொடுப்பு மற்றும் கபடத்தனத்தைக் காட்டுகிறது. மைத்திரிபால எதிரணி செய்தியாளர் மாநாட்டில் பல்வேறு விடயங்களைக் கூறினார். அவைகள் அனைத்தும் அவர் கட்சியிலிருந்து வெளியே செல்லக் கூடியதொரு பாரிய பிரச்சினைகளாகவே தெரியவில்லை.
 
புநொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாட்டுபூ என்பார்கள். இதுதான் மைத்திரிபால சிறிசேனவின் நிலையும். சர்வதேச சக்திகளின் எடுப்பார் கைப்பிள்ளையாக மாற்றப்பட்ட அவர், தாளத்துக்கு ஆடத்தொடங்கியிருக்கிறார். இத்தகைய சர்வதேச சூழ்ச்சியாளர்களின் விருப்பத்தை நிறைவேற்ற ரணில், சந்திரிகா, மைத்திரி ஆகியோர் எடுக்கின்ற முயற்சி, ஒருபோதும் பலிக்கப் போவதில்லை. இந்த உண்மையை மக்கள் இப்போது தெளிவாக அறிந்து விட்டார்கள்.
 
இன்னுமொரு சர்வதேச காட்டிக்கொடுப்பை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த 20 ஆம் திகதி பிஅல்-ஜஙிராபீ தொலைக் காட்சியில் நடந்த நிகழ்ச்சியொன்றில், ஐ.தே.க. எம்.பி. ஹர்ச டி சில்வா, ரஜீவ விஜயசிங்க எம்.பி, குளோபல் தமிழ் அமைப்பின் பிரதிநிதி சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். எப்படி இவர்கள் ஒன்று சேர்க்கப்பட்டார்களோ தெரியவில்லை. ஆனால், இவர்கள் தெரிவித்த கருத்துக்கள், நாட்டுக்கு எதிரான மிகப்பெரிய காட்டிக்கொடுப்பாகவே இருந்தது. சர்வதேச நீதிமன்றத்தில் ஜனாதிபதியை நிறுத்தப் போவதாக இவர்கள் மூவரும் கூறினர். இதன் மூலம் எதிரணியின் பின்னணியிலுள்ள சதியும் கபடத்தனமும் நன்றாகவே தெளிவாகின்றது.
 
நாட்டைக் காப்பாற்றிய, ஆளுமையுள்ள ஒரு தலைவரை வீழ்த்தி விட்டு தங்களது தேவைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய எடுப் பார் கைப்பிள்ளையாக இருக்கும் ஒருவரை, மேற்குலகம் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்த முயற்சிக்கிறது. அதற்கு உகந்தவர் ரணில் விக்கிரமசிங்கதான் என வெளிநாட்டு சக்திகள் தீர்மானித்த நிலையில்தான், ரணில் - சந்திரிகா - மைத்திரி நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
 
ரணில் விக்கிரமசிங்கவை இந்த உயர்பதவியில் இருத்துவதற்கு நாட்டு மக்கள் விரும்பவில்லை. அதனாலேயே 29 தடவைகள் அவர் தேர்தலில் படுதோல்வியடைந்தார். ரணிலும் 30வது தடவை யாகவும் தான் தோல்வியடைவதை விரும்பவில்லை. அதனால் தான் மைத்திரிபால சிறிசேனவைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் உயர் பீடத்தை அடைவதற்கு ரணில் முயற்சிக்கிறார். இது புரியாமல் மாட்டிக்கொண்ட மைத்திரி தனது அரசிய லுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

No comments:

Post a Comment